தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் படத்தில் நடித்தவர் நடிகை சங்கீதா. தற்போது தமிழ் , தெலுங்கு சினிமாக்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாடகர் கிரிஷ்ஸை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஷிவ்ஹியா என்னும் பெண் குழந்தை உள்ளார். இந்த நிலையில் தி.மு.க மேடை ஒன்றில் சங்கீதா பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சங்கீதா தனக்கும் , தனது மகளுக்குமான உரையாடல் குறித்து பகிர்ந்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அதில்” ஸ்டாலின் உனக்கு தாத்தானு சொன்னேன்... உடனே என் பொண்ணு ..அம்மா.. அவர் பார்க்க எப்படி இருக்காரு ..எவ்வளவு ஸ்லிம்மா , ட்ரிம்மா இருக்காரு. அவ்வளவு சுறு சுறுப்பா இருக்காரு. எவ்வளவு வேகமா நடக்குறாரு, ஓடுறாரு. எவ்வளவும் சூப்பரா அங்கிள் பேசுறாங்க. நான் அவரை தாத்தானெல்லாம் கூப்பிட மாட்டேன். நான் அங்கிள்னுதான் கூப்பிடுவேன்னு சொன்னாங்க. பெரிய இடைவெளிக்கு பிறகு கெத்தா எங்க CM அப்படினு சொல்லுற மாதிரி ஒருத்தர் இருக்காருங்க. இவ்வளவு நாளா ஒரு மாதிரி ஈகோ, பிரச்சனை என இருக்கும். நான் யாரையும் குறை சொல்ல இங்க வரலைங்க. ஆனால் முதல் முறையா பிரச்சனையெல்லாம் பின்னால வச்சிட்டு , மக்களை சந்திக்குறாங்க. என்னுடைய குணம் வெளிப்படையா பேசுறது. ஆனால் அதை இப்படி மேடையில பேசுற அளவுக்கு தைரியம் கொடுத்தது தி.மு.க ஆட்சியிலதான். பெண்ணா நான் எது பேசினாலும் அதற்கான மரியாதை கிடைக்குது. அது நடிகையாக இருந்தாலும் சரி ! இல்லைனாலும் சரி . இழிவா பேசமாட்டாங்க. ” என முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் சங்கீதா