பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலின்படி, ஏற்கனவே கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்த காயத்ரி ரகுராமை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிப்பதாக,  பாஜகவின் மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் லோகநாதன் அறிவித்துள்ளார்.


 






அதில், 6 மாத காலம்  கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த காயத்ரி ரகுராம், தனது சுய  விருப்பத்தின் பெயரில் கட்சியிலிருந்து விலகுவதாக சமுகவலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். அத்துடன் மாநில அமைப்பு பொதுச்செயலாளருக்கு வாட்ஸ்-அப்பில்  ”நான் ராஜினாமா செய்கிறேன்” என்றும் செய்தி அனுப்பி இருந்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் ஒப்புதலின்படி, காயத்ரி ரகுராமை  அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து கட்சி  பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”எனது தொழில், பெயரை கெடுத்ததற்கும், அவமானப்படுத்தியதற்கும், எனது சேவை, உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கும் பாஜகவிற்கு நன்றி. ஆபாச பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு. ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். நன்றி மோடி ஜி நான் உங்களை அப்பாவாக பார்த்தேன். அரசியல் ஜோக்கர் Z பிரிவு பாதுகாப்பு மக்களின் பணத்தில் இருந்து. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான். விரைவில் களத்தில் சந்திப்போம்” என அடுத்தடுத்து டிவிட்களை பதிவிட்டுள்ளார்.