வந்தவாசி - கீழம்பி புறவழிச்சாலை

 

காஞ்சிபுரம் அருகே சாலை ஓரம் தனிமையில் பேசி இருந்த காதலன் கழுத்தில் கத்தி வைத்து நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல்,  காதலியை  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் விப்பேடு கிராம பகுதியை ஒட்டி வந்தவாசி - கீழம்பி புறவழிச்சாலை அமைந்துள்ளது. இந்தப் புறவழிச் சாலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த சாலையை ஒட்டி பெட்ரோல் நிலையங்கள், உணவகங்கள், தனியார் பள்ளிகள் என அமைந்துள்ளதும்,  புதிய குடியிருப்பு பிளாட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



 

காலி வீட்டுமனை பகுதி 

 

இந்நிலையில், ஒரு கல்லூரியில் பயிலும் மாணவன் மற்றும் மாணவி கடந்த இரு வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 6:30 மணி அளவில் காதலன் தனது காதலியை அழைத்துக் கொண்டு ஒரு  பள்ளி அருகே உள்ள காலி வீட்டுமனை பகுதி சென்று அங்கு பேசிக் கொண்டிருந்த உள்ளனர்.



 

கழுத்தில் கத்தி வைத்து

 

இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த மது அருந்திய நான்கு வாலிபர்கள் இவர்களைக் கண்டதும், மது போதையில் காதலனின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி அப்பெண்ணை பலவந்தமாக தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

கதறி அழுதும்

 

காதலின் கழுத்தில் கத்தி வைத்ததால் செய்வதறியாது கத்தி கதறி அழுதும் கல் மனம் படைத்த மது போதை நபர்கள் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பின்னர் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தன் பேரில் காவல் ஆய்வாளர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், குண்டு குளம் பகுதியைச் சேர்ந்த  மணிகண்டன், விமல் , ஊக்கு (எ) சிவகுமார், தென்னரசு ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். 12 மணி நேரத்தில் நால்வரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.