தோகைமலை மற்றும் கடவூர் ஒன்றிய பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக விவசாயிகள் காத்திருந்தனர். மேலும் பொங்கலுக்கு கோலம் போடுவதற்கு கலர் கோலமாவுகளை விற்பனைக்காக முழு வீச்சில் தயார் படுத்தும் பணியில் நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை விவசாயிகள் கொண்டாடுவதை தவிர்த்தனர். தற்போது இந்த ஆண்டு கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்டதோடு பருவமழையும் விவசாயிகளுக்கு கை கொடுத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளர். இதனால் இந்த ஆண்டு தமிழர் திருநாளாக பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு அனைத்து தரப்பு மக்களும், விவசாயிகளும் ஆர்வமுடன் எதிர்பார்த்து உள்ளனர்.




கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் முழுமையான விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2  ஆண்டுகளாக பருவமழை கணிசமாக பெய்ததால் அனைத்து விவசாய வயல்களும் பல்வேறு சாகுபடிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.




இதேபோல் கால்நடைகளுக்கான தீவனங்களும் எளிதாக கிடைப்பதால் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனை அடுத்து வருகின்ற 15.01. 2023 தை மாதம் 1ம் தேதி அன்று பொங்கல் பண்டிகை,16.01. 2023 அன்று திருவள்ளுவர் தினம், 17.01.2019 அன்று உழவர் திருநாள் பண்டிகை என மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாட உள்ளனர். இதற்கான வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வர உள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய மிக்க திருவிழாவான பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, கோலமாவு உள்பட பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு வியாபாரிகள் முழு வீச்சில் தயார்படுத்தி வருகின்றன.




விவசாயிகளுக்கு உழவர் வயல் வெளிப்பள்ளி.


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு உழவர் வயல் வெளிப்பள்ளி குறித்து பாலாராஜபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தலைப்பின் கீழ் பண்ணை பள்ளி வேளாண்மை உதவி இயக்குனர் தங்கவேல் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் முரளி கிருஷ்ணன் விவசாயிகளை வரவேற்று பண்ணைப் பள்ளியின் முக்கிய நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.


இந்திய வேளாண் அறிவியல் மையம் புழுதெரியிலிருந்து மாரிக்கண்ணு பருத்தியில் விதை நேர்த்தி செய்து குறித்து செயல் விளக்கமாக விவசாயிகளுக்கு மண்ணில் உள்ள சத்துக்கள் உயிர் உரங்களின் பயன்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தால் இதனை தொடர்ந்து வேளாண்மை துறையின் திட்டங்கள் பற்றி வேளாண்மை உதவி அலுவலர் பொன்ராஜ் விவசாயிகளிடத்தில் எடுத்து கூறினார். இறுதியில் வேளாண் உதவி தொழில்நுட்ப மேலாளர் விக்னேஸ்வரன் நன்றி கூறினார். உழவர் வயல் வெளிப்பள்ளியின் துவக்க நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வேளாண் தொழில்நுட்ப மேலாளர் சுரேஸ் செய்திருந்தார் நிகழ்ச்சியில் முசிறி தனியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.