தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள இயக்க நிர்வாகிகளுக்கு தடைவிதிக்கக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை வரும் 27-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.