கடந்த மாதம் தென்காசியில் நடந்த கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை திமிழ் புத்தாண்டு அன்று வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.


திமுக சொத்து பட்டியல்:


திமுக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரின்  சொத்து பட்டியல் வெளியிடப்படும் என்றும்  சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் கோடி அளவில் ஊழல் செய்யப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். அதன்படி, முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் யாருக்கு எவ்வளவு சொத்து என்ற விவர பட்டியலை அண்ணாமலை இன்று வெளியிட்டார்.


பின்னர் பேசிய அவர், "நான் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது. ஏனோ தானோ என்று இந்த புகாரை வெளியிடவில்லை. எல்லோரும் பூதகண்ணாடி கொண்டு பாருங்கள். 21ஆம் தேதி மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். அந்நாளில் கேள்வி பதில் வைத்து கொள்வோம்.


ரூ. 200 கோடிக்கு ஆல்ஸ்டாம் கம்பெனி மூலமாக கைமாறியது . இந்தோ யூரோப்பியன் வென்சர் பிரைவேட் லிமிடெட் என்ற சிங்கப்பூரை சேர்ந்த ஷெல் கம்பெனியும், ஹாங்காங்கை சேர்ந்த குளோபல் கிங் டெக்னாலஜி என்ற ஷெல் கம்பெனியும் தான் 2011ஆம் ஆண்டு தேர்தல் நிதியாக இந்த பணத்தை முதலமைச்சரிடம் கொடுத்துள்ளது.


இதனை சிபிஐ இயக்குனரிடம் நானே நேரடியாக புகார் அளிக்க உள்ளேன். இதில் மத்திய அரசின் 15 சதவீத பங்கு இருப்பதால் இதனை சிபிஐ விசாரிக்க முழு உரிமை உள்ளது. இது நம் ஜனநாயகத்திற்கான போராட்டம். ஊழல், லஞ்சம் குறித்து இப்போது கேள்வி கேட்காவிட்டால், தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய கேடு காத்துக்கொண்டு இருக்கிறது" என்றார்.


வீடியோவில் வெளியான சொத்து விவரம் பட்டியல் வருமாறு:


ஜெகத்ரட்சகன் - ரூ.50 ஆயிரத்து ,219.37 கோடி


எ.வ.வேலு - ரூ.5,442.39 கோடி


கே.என்.நேரு - ரூ.2,495.14 கோடி


கனிமொழி- ரூ.830.33 கோடி


கலாநிதிமாறன் - ரூ.12,450 கோடி


டிஆர் பாலு - ரூ.10,841.10 கோடி


துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் - ரூ.579.58 கோடி


கலாநிதி வீராசாமி - ரூ.2,923.29 கோடி


பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி - ரூ.581.20 கோடி


திமுக கட்சியின் சொத்து மதிப்பு - ரூ.1,408.94 கோடி


அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.1,023.22 கோடி


உதயநிதி - ரூ.2,039 கோடி


சபரீசன் - ரூ.902.46 கோடி


மொத்தம் ரூ.1,343,170,000,000 (ரூ.1,34,317 கோடி)


அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியலை பங்கமாக கலாய்த்துள்ள நடிகர் எஸ். வி. சேகர், "ஏங்க இந்த ஒரு மணி நேரமா இத்தனை கம்பிளெயிண்ட் சொல்றேன். சும்மா சிரிக்கிறீங்க. டேய் போலீஸ் ஸ்டாஷன்ல சொல்ல வேண்டியதை பொட்டிக்கடையில வந்து சொல்லிட்டிருக்க. இடத்தை காலி பண்ணு" என குறிப்பிட்டுள்ளார்.