மலையாள திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் சேதுமாதவன். பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மலையாளத்தில் பல படங்களை இயக்கியுள்ளார். நடிகர் கமல் ஹாசனை குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் சேதுமாதவன் ஆவார்.


தமிழில் இவர் சிவக்குமார் - ராதாவை வைத்து மறுபக்கம் என்ற படத்தை இயக்கினார். தங்கத்தாமரை விருது பெற்ற முதல் தமிழ் படம் இதுவாகும். அதேபோல் கமல் ஹாசன் நடித்த நம்மவர் படத்தையும் சேதுமாதவனே இயக்கினார்.


இந்நிலையில் இவர் வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் வசித்துவந்தார். 90 வயதான சேதுமாதவன் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.




அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.


 






மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Yuvan Shankar-Vijay: 18 ஆண்டுகளுக்குப் பின் இணையும் விஜய்-யுவன்... வருகிறதா அதிரடி அறிவிப்பு!