கொரோனா தொற்று மீண்டும் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தொற்றாளார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் ஊரடங்கு பிறப்பிக்கப்படவிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ‛‛சென்னையில் லாக்டவுன் செய்யும் எந்த திட்டமும் இல்லை என்றும், இது போன்ற வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றும் அந்த அறிவிப்பில் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் லாக்டவுன் என வதந்தி பரப்பினால் நடவடிக்கை
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் | 31 Mar 2021 02:35 PM (IST)
சென்னையில் லாக்டவுன் போடவிருப்பதாக வதந்தி பரப்பினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
CORPORATION_COMMISIONER