தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் மற்றும் சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை: (செண்டிமீட்டரில்)


வடகிழக்கு பருவமழை வலுவடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேட்டுப்பாளையத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.


பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) 13, கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்), சிவகிரி (தென்காசி மாவட்டம்), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை மாவட்டம்) தலா 12, மண்டலம் 03 புழல் ஜிசிசி (திருவள்ளூர் மாவட்டம்), புழல் ஆர்க் (திருவள்ளூர் மாவட்டம்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர் மாவட்டம்) தலா 11, அதிராமபட்டினம் அவ்ஸ் (தஞ்சாவூர் மாவட்டம்), சிங்கம்புணரி (சிவகங்கை மாவட்டம்) தலா 10, மண்டலம் 12 மீனம்பாக்கம் (சென்னை மாவட்டம்), சென்னை விமான நிலையம் (சென்னை மாவட்டம்), ஆலந்தூர் (சென்னை மாவட்டம்) தலா 9, ஆயின்குடி (புதுக்கோட்டை மாவட்டம்), எஸ்ஆர்சி குடிதாங்கி (கடலூர் மாவட்டம்), காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம் மாவட்டம்), மதுரை நகரம் (மதுரை மாவட்டம்) தலா 8, நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்), அழகரை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), மண்டலம் 13 அடையாறு (சென்னை மாவட்டம்), மண்டலம் 14 பெருங்குடி (சென்னை மாவட்டம்), மண்டலம் 06 கொளத்தூர் (சென்னை மாவட்டம்), தீர்த்தாண்டதானம் (மாவட்டம் ராமநாதபுரம்), ஆவுடையார்கோயில் (புதுக்கோவில் மாவட்டம்), ), பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்), திண்டுக்கல் (மாவட்டம் திண்டுக்கல்), நாகுடி (புதுக்கோட்டை மாவட்டம்), கிளானிலை (புதுக்கோட்டை மாவட்டம்) தலா 7, மயிலாடி (கன்னியாகுமரி மாவட்டம்), ஆர்.எஸ்.மங்கலம் (இராமநாதபுரம் மாவட்டம்), வம்பன் கே.வி.கே. அவுஸ் (புதுக்கோட்டை மாவட்டம்), உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்), காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்), அரிமளம் (மாவட்டம் புதுக்கோட்டை), திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்), திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்), திருப்பத்தூர் , குன்றத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


மேலும், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில்  ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி,  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்  பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.