காஞ்சிபுரம்  ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு முகாமினை  மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் துவக்கி வைத்தார். உடன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.



 

மேலும் புற்றுநோய் கண்டறியும் முகாம்கள், காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு வட்டார மருத்துவமனைகள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் தினசரி நடத்தப்பட்டு வந்தன. இம் முகாம்களில், பிரதானமாக, வாய் மற்றும் தொண்டை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், ஆகியவற்றுக்கான கண்டறிதல் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.இதில் செவிலியர்கள் புற்றுநோயை கண்டறிவது மற்றும் தடுப்பது குறித்து பதாகைகளை ஏந்தியவாறு செவிலியர்கள் அப்பகுதி முழுவதும் பேரணியாக சென்றனர்.

 

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  தெரிவித்திருப்பது :   காஞ்சிபுரம், அரசினர் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி  நிலையம், 1969-ஆம் ஆண்டில், பேரறிஞர் அண்ணாவின் நினைவாக தொடங்கப்பட்டதாகும். இந்நிலையில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக மட்டுமின்றி, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில், புற்றுநோய் கண்டறிதல், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக தனித்தன்மையுடன் தொடங்கப்பட்டதாகும். தேசிய புற்றுநோய் தடுப்பு திட்டத்தில் கீழ் இந்நிலையம் தொடங்கப்பட்டு, மேற்கண்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, புற்றுநோய் கண்டறியும் முகாம்கள், காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு வட்டார மருத்துவமனைகள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் தினசரி நடத்தப்பட்டு வந்தன. இம் முகாம்களில், பிரதானமாக, வாய் மற்றும் தொண்டை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், ஆகியவற்றுக்கான கண்டறிதல் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.




அவ்வாறு நடத்தப்பட்ட முகாம்கள் மூலம், 2013-ஆம் ஆண்டு வரையில், 2,39,811 நபர்களுக்கு PAP SMEAR பரிசோதனைகள் செய்யப்பட்டு, 3377 நபர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதென உறுதி செய்யப்பட்டு, உரிய நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், 2522 நபர்களுக்கு ஆரம்ப நிலை புற்றுநோய் அல்லது புற்றுநோயாக இருக்கலாம் என்ற ஐயம் உள்ளதென தெரிய வந்து, அந்த நபர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு,  சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.


 PAP SMEAR பரிசோதனைகள்


முகாம் பணிகளுக்கென பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நிலையத்தைச் சார்ந்த இரு ஊர்திகள் 2010ம் ஆண்டு கழிவு நீக்கம் செய்யப்பட்டதனால், முகாம் பணிகளுக்கான காஞ்சிபுரம் நகரத்திற்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில் முகாம் பணிக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. எனவே, 2013 ஆம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் தினசரி முகாம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அவ்வாறு நடத்தப்பட்ட முகாம்கள் மூலம், 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில், 37603 நபர்களுக்கு PAP SMEAR பரிசோதனைகள் செய்யப்பட்டு, 1260 நபர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதென உறுதி செய்யப்பட்டுஉரிய பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுசிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 



தற்போதுஇந்நிலையத்திற்கெனதிருப்பெரும்புதூரில் செயல்பட்டு வரும்இண்டியா யமஹா மோட்டார்ஸ் லிமிடட் நிறுவனத்தின் மூலம் அவசர ஊர்தி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தினை உபயோகப்படுத்திஇம்முகாம் பணிகளைமீண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தடையின்றி சிறப்பாக நடத் உத்தேசிக்கப்பட்டுள்ளது என அந்த செய்தி  குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது