தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய  பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.


மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 22- ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதிகளில், 24- ஆம் தேதி வாக்கில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி இன்று, தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் நாளை, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி பதிவாக மழை (செண்டிமீட்டரில்):


புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) 16, கிராண்ட் ஆனைகட் (தஞ்சாவூர் மாவட்டம்) 14, கரூர் (கரூர் மாவட்டம்), திருச்சிராப்பள்ளி விமான நிலையம் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) தலா 13,  சின்னகளார் (கோயம்புத்தூர் மாவட்டம்), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) தலா 12,  நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்), சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்) தலா 11,  ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்), விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்), பஞ்சப்பட்டி (கரூர் மாவட்டம்), தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) தலா 10,  சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்), ஏற்காடு (சேலம் மாவட்டம்), சென்னிமலை (ஈரோடு மாவட்டம்) தலா 9  செ.மீ மழை பதிவாகியுள்ளது.