சென்னையில் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெளியே பயணம் செய்பவர்கள் குடையுடன் செல்லுமாறு வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி 20 ஜூன் தொடங்கி 26 ஜூன் ஞாயிற்றுக்கிழமை முடிய ஒரு வாரத்துக்கு சென்னையில் மழை பொழியும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும் திங்கள் செவ்வாய் ஆகிய இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் புதன் வியாழன் ஆகிய தேதிகளில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசானது முதல் மிதமானது வரைத் தூறல் இருக்குமென்றும் கூறியுள்ளது.அடுத்து, சனிக்கிழமை அன்று லேசானது முதல் மிதமானது வரை மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்