கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 15 முதல் 20 நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு முழுமையாக அணைக்கப்பட்டது.


கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் பகுதிக்குள் உள்ள செக்-இன் கவுண்டரில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்து, முழுவதுமாக அணைக்கப்பட்டது என்றும், சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செக்-இன் நடைமுறை, மீண்டும் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






 "இரவு 9:12 மணிக்கு செக்-இன் ஏரியா போர்டல் D இல் திடீர் தீ  விபத்து ஏற்பட்டது, இரவு 9:40 மணியளவில் அது முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செக்-இன் நடைமுறை இரவு 10.15 மணி அளவில் மீண்டும் செயல்பட தொடங்கியது" என்று கொல்கத்தா விமான நிலையம் டிவிட்டரில் பதிவு செய்துள்ளது.






தற்போது வரை, தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.  ஆனால் காவல் துறையின் முதற்கட்ட அறிக்கையின்படி, மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.  தீ விபத்து ஏற்பட்ட பகுதி கரும் புகையால் சூழ்ந்ததாகவும், உடனடியாக இரண்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து, தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.    


Minister Senthil Balaji : 'இலாகா இல்லாத அமைச்சராகும் செந்தில்பாலாஜி?’ இன்று வெளியாகிறதா அறிவிப்பு?


Special Olympics: 190 நாடுகள்.. 7 ஆயிரம் வீரர்கள்... ஜூன் 17ல் தொடங்கும் சிறப்பு ஒலிம்பிக்.. பெர்லின் கிளம்பிய இந்திய அணியினர்..!