17 இடங்களில் சதமடித்த வெயில்: (14.06.2023)
தமிழ்நாட்டில் 17 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், திருத்தணி, கரூர் பரமத்தி, காரைக்கால், ஈரோடு ஆகிய பகுதிகளில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னையில் 105 டிகிரி ஃப்ரான்ஹீட் பதிவு:
சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை, மீனம்பாக்கத்தில் 104 டிகிரி ஃப்ரான்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. தூத்துக்குடி, மதுரை விமான நிலையம், கடலூர், மதுரை நகரம், நாகை ஆகிய பகுதிகளில் 103 டிகிரி ஃப்ரான்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, தஞ்சை, திருச்சி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாயுள்ளது.
உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியவை:
கொத்தமல்லி வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும், பெருஞ்சீரகம் விதைகள் நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கின்றன. புதினா உடல் வெப்பநிலையைக் குறைக்கிறது, அதே நேரத்தில் சீரக விதைகள் வீக்கம் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும்.
கொத்தமல்லி:
இது உடலில் இருந்து வியர்வையை வெளியேற்ற உதவுகிறது. இதனால், உடலின் வெப்பநிலை குறையும். புத்துணர்ச்சியும் இருக்க உதவுகிறது. இதனால் செரிமான மண்டலம் மகிழ்ச்சியாக வேலை செய்யும்.
- ஒரு டீஸ்பூன் தனியாவை எந்த உணவு சமைத்தாலும் சேர்க்கலாம்.
- கொத்தமல்லி இலைகளை வெள்ளரி மற்றும் தக்காளியுடன் சேர்த்து சால்ட் தயாரிக்க பயன்படுத்தலாம்.
- கொத்தமல்லி சட்னி அடிக்கடி சாப்பிடலாம்.
பெருஞ்சீரகம்:
இதில் உள்ள வைட்டமின் சி செரிமானத்தை தூண்டுகிறது. உங்களை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது.
- சமைக்கும் உளவுகளில் சிறிது பெருஞ்சீரம் தாளிக்கலாம்.
- பெருஞ்சீரக டீ நல்ல சாய்ஸ்.
- சாலட் உணவுகள் சாப்பிடும்போது பெருஞ்சீரத்தை பொடித்து அதில் தூவி சாப்பிடலாம்.
சீரகம்:
சீர்+ அகம்- சீரகம் -
உடலின் உட்புறத்தை சீராக்குகிறது என்று பொருள். இந்திய சமையலில் இது மிக முக்கியமானது. இதன் நறுமணம், சுவை ஆகியவற்றை விடவும், இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் திறன் கொண்டது. கோடைக்காலத்திற்கு ஏற்ற மசாலா.
- சமையில் தினமும் சீரகம் சேர்க்கலாம்.
- மோர், எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றுடன் சீரகத் தூள் சேர்த்து சாப்பிடலாம்.
புதினா:
புதினா ஒரு சிறந்த மூலிகை. இது அஜீரணக் கோளாறுகளை தடுக்கும். அமிலத்தன்மை மற்றும் இரைப்பை அழற்சி தொடர்பான நெஞ்செரிச்சல் உள்ளிட்டவைகளை போக்கும். கோடை வெயிலிலும் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.
- டீயில் புதினா சேர்க்கலாம்.
- புதினா சட்னி சாப்பிடலாம்.
- லெமன் புதினா ஜூஸ் குடிக்கலாம்.