ஆக்கிரமிப்பு வழக்கில்  மனுதாரருக்கு விதிக்கப்பட்ட ரூ.5000   அபராத தொகையை,  நன்கொடையாக உயர்நீதிமன்ற கிளை பதிவாளரால் , மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

 

தென்காசி மாவட்டம் வீரசிகாமணி பகுதியை சேர்ந்த மாரியப்பன் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்ததாவது...,” தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்  அருகே வீரசிகாமணி கிராமத்தில் உள்ள பரோட்டா கடை மற்றும்  கட்டிடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக வருவாய்துறையினர் தெரிவித்து உள்ளனர்.  இது  தொடர்பாக. மனுதாரர்களின் ஆட்சேபனை மனுவை தள்ளுபடி செய்யாமல் , பரிசீலனை செய்ய  உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் கூறி உள்ளார். இந்த மனு நீதிபதிகள் S.S.சுந்தர்,  பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது , நீதிபதிகள் , மனுதாரர் புரோட்டா கடை வைத்து உள்ளார். அவர் அரசு பொது சொத்தை ஆக்கிரமித் துள்ளார்.  இது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், அதை மறைத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.



 

எனவே,மனுதாரர் பொது சொத்தை ஆக்கிரமித்து உள்ளார்.  என உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. அவரே முன் வந்து தனது ஆக்கிரமிப்பை விலக்கி கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்  மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர். அப்போது,  மனுதாரர் வழக்கறிஞர் நன்கொடையாக செலுத்துகிறேன் என முறையிட்டார். இதை நீதிபதிகள் ஏற்று கொண்டனர்.



 

 மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் பெயரில் உயர்நீதிமன்ற பதிவாளாரால் புதிய   வங்கி கணக்கு தொடங்க வேண்டும். மனுதாரர்,  இந்த நன்கொடை தொகையை,  உயர்நீதிமன்ற கிளை பதிவாளரால் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இந்த வங்கி கணக்கில் செலுத்தப்படும் அபராத தொகையை, மற்றும் நன்கொடை தொகை  மதுரையில் உள்ள கலைஞர் நூலகத்திற்கு புத்தகம் வாங்க பயன்படுத்த வேண்டும்  என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி  செய்து உத்தரவிட்டனர்.

 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 


 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண