குடவோலை முறையை பெருமைப்படுத்திய தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி: டெல்லி அணிவகுப்பில் சுவாரஸ்யம்


டெல்லியில் நடைபெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில், குடவோலை முறையை பெருமைப்படுத்தும் விதமாக அலங்கார ஊர்தி இடம்பெற்றது. 


டெல்லியில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெற்றது. இதில் குடவோலை முறையை பெருமைப்படுத்தும் விதமாக அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. மேலும் இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன. 


 நாடு முழுவதும் 75வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு பெண்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 


டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பும் மாநில அரசுகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெற்றது. இதையடுத்து பல்வேறு மாநிங்களில் இருந்து வந்திருந்த 1500 பெண் நடனக்கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான காரணம் என்னவென்றால் பழங்காலத் தமிழகத்தின் தேர்தல் நடைமுறையை விளக்கும் வகையில் குடவோலை முறை ஊர்தி அணிவகுப்பு இடம்பெற்றது தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


குடவோலை முறை


16ஆம் நூற்றாண்டு வரை இந்த குடவோலை முறை தேர்தல் நடைமுறையில் இருந்துள்ளது. இதன் உண்மைத் தன்மையை விளக்கும் பொருட்டாக, கி.பி. 907 முதல் 955 வரை ஆட்சியில் இருந்த மன்னன் முதலாம் பராந்தக சோழன் காலத்திற்கு உட்பட்ட மூன்று கல்வெட்டுகள் கண்டறியப்பட்டதன் மூலம் இது குறித்த தகவல்கள் வெளியுலகிற்கு தெரிந்துள்ளது. குடவோலை முறை  என்பது முதலாம் பராந்தக சோழன் காலத்தில் தொடங்கி சோழர்கள் காலத்தில் பின்பற்றப்பட்டது. இதன் மூலம் நிர்வாக சபை உறுப்பினரைத் தேர்ந்துதெடுத்தனர். குடவோலை முறை என்பது மன்னர் காலத்தில் நடைபெற்ற தேர்தல் முறை ஆகும். 


இந்தியாவின் 75வது குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரான் பங்கேற்றார்.


திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றியபோது, பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் அங்கிருந்தனர். தேசிய கொடியை திரௌபதி முர்மு ஏற்றியபோது பார்வைாளர்கள் மாவத்தில் குவிந்திருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பின்னர், முப்படைகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.


பிரம்மாண்ட அணிவகுப்பு:


அணிவகுப்பில் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் பங்கேற்று பல சாகசங்களை செய்தனர். குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றிய பிறகு, வானில் இருந்து இந்திய ஹெலிகாப்டர்கள் மர். குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ண கொடியுடன் பறந்து அனைவரையும் வியக்க வைத்தது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, ராஷ்ட்ரபதி  பவன் முழுவதும் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.


இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங், ஜெய்ஷா, நிர்மலா சீதாராமன்,ஜெய்சங்கர் உள்பட மத்திய அமைச்சர்கள், சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றிருந்தனர். முன்னதாக பிரதமர் மோடி நாட்டிற்காக உயிர் நீத்த பாதுகாப்பு வீரர்களுக்கான நினைவு தூணில் மௌன அஞ்சலி செலுத்தினார். குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரனுடன் ஜனாதிபதி மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 10.20 மணியளவில் புறப்பட்டார்.


குடியரசுத் தலைவர், பிரான்ஸ் அதிபரை வரவேற்ற பிரதமர் மோடி:


பின்னர், காலை 10.26 மணிக்கு குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தனது மனைவியுடன் வந்தார். சரியாக 10.33 மணியளவில் குதிரைகள் பூட்டிய வண்டியில் பாரம்பரிய முறைப்படி பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்தார். அவரை பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றனர். பின்னர், மத்திய அமைச்சர்களை பிரான்ஸ் அதிபருக்கு பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.