திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள வெங்கட்ராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 34). கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இவர் பள்ளியில் பயிலும் 13 வயது சிறுமியை பின்தொடர்ந்தது காதலித்து வருவதாக கூறியதாக கூறப்படுகிறது. சில நாட்கள் கழித்து ராஜேஷ்குமாரும் அந்த சிறுமியும் காதலித்து வந்துள்ளார். இருவரும் சேர்ந்து பல இடங்களில் சுற்றியதாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து ராஜேஷ்குமாருக்கும் சிறுமிக்கும் நடந்ததை பற்றி அறிந்த ராஜசேகர் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் அந்த சிறுமியை பின்தொடர்ந்தது நடைப்பெற்ற சம்பவத்தை கூறி உன்னை பற்றி வீட்டில் கூறி விடுவோம் எனக்கூறி மிரட்டி சிறுமியை ராஜேஷ் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.


 




 


பின்னர் சிறுமியிடம் இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் எனக்கூறி இருவரும் மிரட்டியுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று அறியாத சிறுமி அழுதுள்ளார். வீட்டில் நடந்த சம்பவத்தை கூறாமல் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமி அழுது கொண்டே நடந்த கொடூரத்தை பற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடனடியாக சிறுமியின் பெற்றோர் சிறுமியை அணைத்துக் கொண்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிக்கு நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமார் ராஜேஷ் மற்றும் செல்வம் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


 




 



இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது .வழக்கு நடைப்பெற்று வந்த சமயத்தில் ராஜசேகர் உடல்நிலை சரியில்லாமல் திடிரென உயிரிழந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ராஜேஷ்குமார் மற்றும் செல்வம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பின்னர் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.