தமிழ்நாடு:



  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம் - சென்னையில் 6 சிறப்பு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம் 

  • அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்தக்கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணை

  • அதிமுக பொதுக்குழு வழக்கில் ஜனவரி 16 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் 

  • பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி - விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசாணை வெளியீடு 

  • ஈரோடு தாளவாடி பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை கருப்பனை பிடிக்க வனத்துறை தீவிரம் - மயக்க ஊசி செலுத்த திட்டம் 

  • பெண் காவலருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு - கட்சி பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

  • பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை காண 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - இணையதளம் மூலம் பதிவு செய்பவர்களில் 3 ஆயிரம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர் என அறிவிப்பு 

  • தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 15,300 லிட்டர் கலப்பட பால் - உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனையில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலந்தது கண்டுபிடிப்பு 


இந்தியா: 



  • ஆளுநர் விவகாரம் குறித்து முறையிட டெல்லியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுடன் திமுக பிரதிநிதிகள் இன்று சந்திப்பு 

  • நடப்பு நிதியாண்டில் ஜனவரி 10 ஆம் தேதி வரை ரூ.14.71 லட்சம் கோடி நேரடி வரி வசூல் - கடந்த நிதியாண்டை விட 24.58% அதிகம் என மத்திய அரசு அறிவிப்பு 

  • முதலீடு செய்வதற்கான சிறந்த நாடாக இந்தியா திகழ்கிறது - சர்வதேச முதலீட்டாளர்களுக்கான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு 

  • சாதி, மொழிகளுக்கிடையே மத்திய அரசு மோதலை உருவாக்கி விட்டது - பஞ்சாபில் நடைபெறும் ஒற்றுமை பயணத்தின் போது ராகுல்காந்தி குற்றச்சாட்டு 

  • சபரிமலையில் மகரஜோதி நாளில் கூட்ட நெரிசலை தவிர்க்க கடும் கட்டுப்பாடு - பகல் 12 மணி வரை மட்டுமே நீலிமலை ஏற பக்தர்களுக்கு அனுமதி

  • கவர்னர்களை கட்சி ஊழியர்களாக பாஜக பயன்படுத்துகிறது - காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

  • உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு - சட்ட மசோதாவுக்கு மாநில ஆளுநர் ஒப்புதல்


உலகம்:



  • ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பலி - ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் 

  • அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய பனிப்புயல்- 16 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் காயம் 

  • ஆப்கானிஸ்தானில் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற பெண்களுக்கு தடை - அனைத்து மருத்துவமனைகளும் கண்காணிக்க உத்தரவு 

  • தென்கொரியாவை தொடர்ந்து ஜப்பான் மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது சீனா - கொரோனா விவகாரத்தில் சீன பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் நடவடிக்கை


விளையாட்டு:



  • இந்தியாவில் வரும் 13 ஆம் தேதி முதல் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி தொடக்கம் - புவனேஸ்வரில் நடக்கும் முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா - ரஷ்யா மோதல்

  • இலங்கை அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெறுகிறது - தொடரை வெல்ல இந்திய அணி தீவிரம் 

  • மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர்- இந்திய வீராங்கனை சிந்து முதல் சுற்றிலேயே தோல்வி