செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பொது மக்கள் மீது டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சாலையில் இந்த விபத்து நடைபெற்றது. இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் போக்குவரத்து போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பகுதியில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இன்று காலை கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அதே போன்று அங்கு இருக்கும் மருத்துவமனைக்கு  நோயாளிகள் உள்ளிட்ட, ஏராளமானோர் வருவது வழக்கம். இதன் காரணமாக அந்த பகுதி எப்பொழுதும், மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும். மேலும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை சென்னை திருச்சி தேசிய சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பல இடங்களில் முறையான சிக்னல் உள்ளிட்டவை வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.


இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொத்தேரி பகுதியில், அதிவேகமாக தாம்பரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி, அங்கு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற இரண்டு இரு சக்கர வாகனத்தையும் கண்மூடித்தனமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. அதி வேகமாக வந்த டிப்பர் லாரி அங்கு இருந்த டிவைடரில் மோதி , அதனை அடுத்து மரத்திலும் மோதியது. மரத்தில் மோதியதில், மரம் முறிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் , லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அங்கு பேருந்து நிறுத்தத்திற்காக காத்திருந்த 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


KANCHIPURAM : ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் மாயம்.. அமைக்கப்பட்ட 9 தனிப்படைகள்.. சல்லடை போட்டு தேடும் போலீஸ்!


ABP Exclusive : "வீரப்பனை சுட்டுக் கொல்லல… போலீஸ் சொன்னது பச்ச பொய்!" - புகைப்படக் கலைஞர் சிவசுப்ரமணியன்..