தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அந்த கட்சியினர் தேர்தல் பரப்புரையின்போது வாக்குறுதி அளித்தனர். ஆட்சிக்கு வந்த பிறகு படிப்படியாக தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்படும் என்று கூறினர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், எந்தெந்த மண்டலத்தில் எத்தனை கடைகள் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை மண்டலம்:
“ சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை வடக்கில் மொத்தம் உள்ள 100 கடைகளில் 20 கடைகள் மூடப்பட உள்ளது. மத்திய சென்னையில் மொத்தமுள்ள 93 கடைகளில் 20 கடைகள் மூடப்பட உள்ளது. தென்சென்னையில் மொத்தமுள்ள 102 கடைகளில் 21 கடைகள் மூடப்பட உள்ளது.
காஞ்சிபுரத்தில் வடக்கில் மொத்தமுள்ள 146 கடைகளில் 15 கடைகளும், காஞ்சிபுரம் தெற்கில் மொத்தமுள்ள 109 கடைகளில் 16 கடைகளும் மூடப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்ட கிழக்கில் மொத்தமுள்ள 217 கடைகளில் 32 மதுக்கடைகள் மூடப்பட உள்ளது. திருவள்ளூர் மேற்கில் மொத்தமுள்ள 138 கடைகளில் மொத்தம் 14 கடைகள் மூடப்பட உள்ளது.
கோயம்புத்தூர் மண்டலம்:
கோயம்புத்தூர் மண்டலத்திற்குட்பட்ட கோயம்புத்தூர் வடக்கில் மொத்தமுள்ள 166 கடைகளில் 10 மதுக்கடைகள் மூடப்பட உள்ளது. கோயம்புத்தூர் தெற்கில் மொத்தமுளம்ள 139 கடைகளில் 10 கடைகள் மூடப்பட்டுள்ளது. திருப்பூரில் மொத்தமுள்ள 251 கடைகளில் 24 கடைகள் மூடப்பட உள்ளது.
ஈரோட்டில் மொத்தமுள்ள 207 கடைகளில் 24 மதுக்கடைகள் மூடப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 76 கடைகளில் 3 மதுக்கடைகள் மூடப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 94 கடைகளில் 7 கடைகள் மூடப்பட உள்ளது.
மதுரை மண்டலம்:
மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை வடக்கில் 108 கடைகளில் 9 கடைகளும், மதுரை தெற்கில் உள்ள 147 கடைகளும் 12 கடைகளும் மூடப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 159 கடைகளில் 15 கடைகள் மூடப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 127 கடைகளில் 14 கடைகள் மூடப்பட உள்ளது. ராமநாதபுரத்தில் 119 கடைகளில் 8 மதுக்கடைகளும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 185 கடைகளில் 17 கடைகளும் மூடப்பட உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 160 கடைகளில் 13 கடைகளும், தூத்துக்குடி மொத்தமுள்ள 140 கடைகளில் 16 கடைகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 110 கடைகளில் 12 கடைகளும், தேனியில் உள்ள 90 கடைகளில் 9 கடைகளும் மூடப்பட உள்ளது.
சேலம் மண்டலம்:
சேலம் மண்டலத்திற்குட்பட்ட சேலம் மாவட்டத்தில் 211 கடைகளில் 17 மதுக்கடைகளும் மூடப்பட உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 68 கடைகளில் 4 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 119 கடைகளில் 2 கடைகளும், நாமக்கல் மாவட்டத்தில் 187 கடைகளில் 18 கடைகளும் மூடப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 114 கடைகளில் 8 கடைகளும், திருவண்ணாமை,ல 215 கடைகளில் 8 கடைகளும், அரக்கோணம் மாவட்டத்தில் 87 கடைகளில் 2 கடைகளும் மூடப்பட உள்ளது.
திருச்சி:
திருச்சி மண்டலத்திற்குட்பட்ட திருச்சி மாவட்டத்தில் உள்ள 177 கடைகளில் 16 கடைகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 99 கடைகளில் 7 கடைகளும், தஞ்சை மாவட்டத்தில் உள்ள 160 கடைகளில் 15 கடைகளும் மூடப்பட உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 144 கடைகளில் 12 கடைகளும், கடலூரில் உள்ள 145 கடைகளில் 11 கடைகளும், திருவாரூரில் உள்ள 111 கடைகளில் 10 கடைகளும், விழுப்புரத்தில் உள்ள 220 கடைகளில் 21 கடைகளும், பெரம்பலூரில் உள்ள 89 கடைகளில் மூடப்பட உள்ளது. மொத்தமுள்ள 5 ஆயிரத்து 329 கடைகளில் 500 கடைகள் மூடப்பட உள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.