கரூர் : தமிழ் புத்தாண்டையொட்டி கற்பக விநாயகருக்கு 500 கிலோ காய்கறிகளால் அலங்காரம்

கரூரில் பல்வேறு ஆலயங்களில் சித்திரை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

Continues below advertisement

சுபகிருத ஆண்டு பிறப்பையொட்டி கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 500 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

அதைத்தொடர்ந்து மூலவர் கற்பக விநாயகர், தீர்த்த விநாயகர், பாலமுருகன், விஷ்ணு, துர்க்கை, நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால்,  தயிர், பஞ்சாமிர்தம்,  தேன்,  நெய்,  இளநீர்,  எலுமிச்சை சாறு, திருமஞ்சள்,  மஞ்சள்,  சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து மூலவர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு பக்தர்கள் வழங்கிய 500 கிலோ காய்கறிகள்  மற்றும் பழங்களால் மூலவர் கணபதி மற்றும் தீர்த்த விநாயகர் பாலமுருகன் விஷ்ணு துர்க்கை மற்றும் நவகிரகங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.


தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் காய்கறி மற்றும் பழங்கள் அலங்காரத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று பயம் காரணமாக ஆலயம் திறக்கப்படாமல் தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் சிறப்பு வழிபாடு, அபிஷேகங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். இது போல் கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று காய்கறி மற்றும் பழங்களால் சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டன.


 

குறிப்பாக ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை முதல் நாள் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து நால்வர் அரங்கில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பல்வேறு இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று பிரதோஷம் என்பதால் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், வெள்ளிக் கவச உடை அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் காட்சி அளித்தார். ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை முதல் நாள் சிறப்பு அலங்காரத்தையும், அதைத் தொடர்ந்து நந்தி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அலங்காரத்தையும், காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக ஆன்மிக தளங்களுக்கு பொதுமக்கள் அனுமதி வழங்கப்படாத நிலையில் இந்த ஆண்டு சித்திரை முதல் நாள் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் நேர்த்திக் கடன் செய்து வந்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola