தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதன்படி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை லேசானது முதல் மிதமானதாக பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அளவில் பெய்வதற்கும், சில இடங்களில் மிதமாக பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


கோடை காலம் என்பதால் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாகவே வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இந்த சூழலில், இந்த மிதனமா மழை என்ற அறிவிப்பால் 5 மாவட்ட மக்களும் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 3-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கும் என்று நேற்று இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : https://tamil.abplive.com/entertainment/sequel-of-maragatha-naanayam-official-update-from-director-ark-sarvan-4624/amp