சென்னையின் மிக முக்கிய போக்குவரத்து சேவையாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை இருந்து வருகிறது. நாள்தோறும் இலட்சக்கணக்கானோர் இந்த மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி, புறநகரிலிருந்து, சென்னைக்கும் சென்னையில் இருந்து புறநகர் பகுதிக்கு சென்று வருகின்றனர். ஒரு சில சமயங்களில் பராமரிப்பு பணி காரணமாக இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம்.
49 ரயில்கள் ரத்து
அந்த வகையில் திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் வரும் 23ஆம் தேதி, காலை 7:00 மணி முதல் மாலை 3:40 மணி வரை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. ரயில்வே மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது முன்னிட்டு, வருகின்ற 23ஆம் தேதி 49 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் தளத்தில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம் என்ன ?
திருவள்ளூர் - சென்னை கடற்கரை :
காலை 11 மணி அளவில் திருவள்ளூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று மதியம் 1:30 மணிக்கு செல்லும் திருவள்ளூர் ஆவடி ரயில் ரத்து செய்யப்படுகிறது.
மதியம் 12 மணி அளவில் கடம்பத்தூர் சென்னை கடற்கரை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட உள்ளது. ஆவடியில் இருந்து காலை 5 மணிக்கு எண்ணூர் செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல்
திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில்கள், காலை 6:50 மணி, 7:30 மணி, 8:10 மணி, 8:20,8:30,9:10,9:25,10:05,11:30 மணிக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோன்று மதியம் 1:05,2:40,3:05 மணிக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் -சென்னை சென்ட்ரல்
அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. காலை 6:40, காலை 7, 10:00, காலை 11:15 நண்பகல் 12 மதியம் 1:40 ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
திருநின்றவூர் - சென்னை சென்ட்ரல்
திருநின்றவூர் பகுதியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் காலை 7:55 மணி ரயில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று பகல் 12:35 மணிக்கு செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - திருவள்ளூர்
சென்னை கடற்கரையிலிருந்து காலை 5:40,6:10,9:55 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையிலிருந்து திருத்தணிக்கு வரும் 12: 10 ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணத்திற்கு வரும் மதியம் 2:25 மணி ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் - கடம்பத்தூர்
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10:30 மணிக்கு கடம்பத்தூர் செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோன்று சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்திற்கு வரும் 12:40 ரயில் மற்றும் மதியம் 1:25 மணி ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர்
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு 6:50 ,7:45 8:05, 8:40, 9:15,9:35,10:40,11:30 மணிக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு மதியம் 12 மணி, மதியம் 1 மணி, மதியம் 1:05, 1:50 மணி, மதியம் 2:40 மணி ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
எண்ணூரில் இருந்து திருவள்ளூருக்கு, காலை 6:35 மணிக்கு வரும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு காலை 10 மணி, 11:45 மணி ,மதியம் 2:15 மணி ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.