"பாலகணபதி, பக்தி கணபதி, வீர கணபதி" - அப்பப்பா... எத்தனை கணபதி
1. முதலாவதாக நாம் பார்க்க இருப்பது ”பாலகணபதி”...
உருவத்தில் குழந்தை போல காட்சியளிக்கும் இவர், சிவந்த நிறத்தில்... கையில் வாழைப்பழம், பலாப்பழம், கரும்பு, மாம்பழம் ஆகியவற்றை தன் ’நான்கு’ கரங்களில் ஏந்தியவாறு நமக்கு காட்சி அளிக்கிறார்...
2. தருண கணபதி
கையில் பாசம், அங்குசம், கரும்புத் துண்டு, ஒடிந்த தந்தம், மோதகம், விளாம்பழம், நெற்கதிர்கள், நாவற்பழம் ஆகியவற்றை தன் 8 கரத்தில் ஏந்தியவர், சிவப்பு நிற திருமேனியோடு நமக்கு காட்சி அளிக்கிறார்...
3. பக்தி கணபதி
வெண்ணிற மேனியோடு நமக்கு காட்சி அளிக்கும் பக்தி கணபதி தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், பாயாசக் கிண்ணம் ஆகியவற்றை தனது நான்கு திருக்கரங்களில் வைத்திருப்பவராக அமர்ந்திருக்கிறார்...
4. வீர கணபதி:
வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறு பொருட்களை தன்னுடைய 16 திருக்கரங்களில் ஏந்தியவாரு காட்சியளிக்கும் வீர கணபதி, சிவந்த திருமேனியை உடையவர்...
5. சக்தி கணபதி :
மஹா சக்தியை உடையவரான சக்தி கணபதி... சிவந்த நிறமுடையவராக, பச்சைநிற மேனியையுடைய தேவியைத் தழுவிக்கொண்டு இருப்பவராக நமக்கு காட்சி அளிக்கிறார். பாசம், பூமாலை இவற்றைத் தாங்கிய திருக்கரத்துடன் நமக்கு அருள் பாலிக்கிறார்.
6. துவிஜ கணபதி :
தன் திருக்கரங்களில் அட்சமாலை, புத்தகம், தண்டம், கமண்டலம், ஆகியவற்றை ஏந்தியவராக இருப்பவர் நம் துவிஜ கணபதி, 4 முகங்களுடன் வெண்மையான திருமேனியை உடையவாராக நமக்கு காட்சி அளிக்கிறார்...
7. சித்தி கணபதி :
தன் துதிக்கையில் மோதகத்தை ஏந்தியவராக, பசுமையுடன் பொன் நிறம் கலந்த சித்தி விநாயகர், பரசு, பூங்கொத்து, எள்ளுருண்டை, மாம்பழம் ஆகியவற்றை தன் 4 திருக்கரங்களில் தாங்கியவராக நமக்கு காட்சி அளிக்கிறார்...
8. உச்சிஷ்ட கணபதி :
பெண்ணின் திருமேனியில் தன் துதிக்கையை வைத்து காட்சியளிக்கும் உச்சிஷ்ட கணபதி, நீல நிறமுடையவர். இரண்டு கரங்களில் நீலோத்பவ மலர்களும், மற்றதில் மாதுளம் பழம், நெற்கதி, அட்சமாலை, வீணை ஆகியவற்றை தன் திருக்கரங்களில் ஏந்தியவர் 6 கரங்களை உடையவர்...
9. விக்ன கணபதி :
சக்கரம், சங்கு, கோடாரி, கரும்பு வில், புஷ்ப பாணம், ஒடிந்த தந்தம், பாணம், பூங்கொத்து, புஷ்ப பாணம், மாலை, பாசம், ஆகியவற்றை தன் 10 திருக்கரங்களில் ஏந்தியவாறு நமக்கு காட்சி அளிக்கும் விக்ன கணபதி, பொன்னிற திருமேனியை உடையவர்....
10. ஷிப்ர கணபதி :
ஷிப்ர கணபதி ஒடிந்த தந்தம், பாசம், கற்பகக் கொடி, அங்குசம் ஆகியவற்றை தன் 4 திருக்கரங்களில் ஏந்தியவராக... ரத்ன கும்பத்தை துதிக்கையில் வைத்து, சிவந்த மேனியை உடையவராக நமக்கு காட்ச் அளிக்கிறார்...
11. ஹேரம்ப கணபதி :
ஹேரம்ப கணபதி தனது 10 கரங்களில் இரண்டு கரத்தில் வரத முத்திரை மற்றும் அபய முத்திரையோடும்,மீதமுள்ள கரங்களில் பரசு, பாசம், தந்தம், சம்மட்டி, மாலை, அட்சமாலை மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். இவர் ஐந்து முகங்களை கொண்டவராக நமக்கு காட்சி அளிக்கிறார்...