தமிழ்நாட்டில்  மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவன செயல் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். பால்வளம், பால் பண்ணை வளர்ச்சித்துறை ஆணையராக ஜி.பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனிமவளத்துறை மேலாண் இயக்குநராக சுதீப் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, தமிழ்நாட்டில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ரம்யா பாரதி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். நெல்லை சரக டிஐஜியாக பிரவேஷ்குமாரும், சேலம் சரக டிஐஜியாக பிரவீன்குமார் நியமிக்கப்பட்டார்.


TN Pongal Gift 2022: பொங்கலுக்கு பிறகும் பொங்கல் பரிசு.. தேதியை அறிவித்த தமிழக அரசு.!


ஐஜிக்களாக 14 பேருக்கும் ,டிஐஜிக்களாக 3 பேருக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 


அதேபோல், திண்டுக்கல் சரக டிஐஜியாக ரூபேஷ் குமார் மீனா, வேலூர் சரக டிஐஜியாக ஆனி விஜயா நியமனம் செய்யப்பட்டார். ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் காவல் ஆணையராக பாபு நியமிக்கப்பட்டார். பொன்னி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று மதுரை சரக டிஐஜியாக பொறுப்பு வகிக்க இருக்கிறார்.


மேலும், சமுக நீதி மற்றும் மனித உரிமை ஐஜியாக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டார். மகேஸ்வரி ஐஜியாக பதவி உயர்வு பெற்று தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக நியமிக்கபட்டார். தஞ்சாவூர் சரக டிஐஜியாக கயல்விழி, குற்றபிரிவு ஐஜியாக காமினி நியமிக்கப்பட்டார்.


Golden Globe 2022 | கோல்டன் குளோப் விருதுகள் 2022.. யார் யாருக்கு என்னென்ன விருது தெரியுமா?


துரைக்குமார் ஐஜியாக பதவி உயர்வு பெற்று நெல்லை காவல் ஆணையராக நியமிக்கபட்டார். ஆசியம்மாள் ஐஜியாக பதவி உயர்வு பெற்று உளவுத்துறை ஐஜியாக பதவி நியமிக்கபட்டார். சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக கபில்குமார் நியமிக்கபட்டார்.


அமலாக்க பிரிவு ஐஜியாக விஜயகுமாரி, லஞ்ச ஒழிப்பு துறை ஐஜியாக லலிதா லட்சுமி நியமிக்கப்பட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண