ஜனவரி 31ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், ‘இம்மாத இறுதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். பொங்கலுக்கு முன்பாக தவிர்க்க இயலாத காரணங்களால் பொங்கல் தொகுப்பை (Pongal Parisu Thoguppu) பெற முடியாதவர்கள் ஜனவரி 31ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். ஜனவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அறிவிக்கப்படும் வேறுநாட்களில் தொகுப்பை பெறலாம். குறிப்பிட்ட தேதியில் பெற முடியாவிட்டாலும் மற்றொரு நாளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறினார்.
மேலும், பொங்கல் தொகுப்பு கொடுக்கும்போது சில இடங்களில் சில பொருட்களை விட்டு விட்டு கொடுப்பதாக புகார் வருவதாகவும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தவறு ஏதும் நிகழ்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி எச்சரித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்