இஸ்ரேலில் சிக்கித்தவித்த 212 இந்தியர்கள் ஆப்ரேஷன் அஜய் மூலம் டெல்லிக்கு வந்தடைந்தனர். 


கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தொடங்கியது. பல ஆண்டு காலமாக இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஹமாஸின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கியுள்ளது. தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே கடும் போர் நிலவி வருகிறது. இதனால் இஸ்ரேல் எல்லை பகுதியில் சுமார் 3 லட்சம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இஸ்ரேலுக்கு உதவிடும் வகையில் அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் படை வீரர்களை அனுப்பியுள்ளது. இக்காட்டான சூழலில் அமெரிக்கா இஸ்ரேலுடன் துணை நிற்கும் என உறுதியளித்துள்ளது.


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே கடும் போர் நிலவி வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,800 கடந்து பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து புதன்கிழமையன்று பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒவ்வொரு ஹமாஸ் உறுப்பினரும் இறந்த மனிதர்களுக்கு சமம் ஹமாஸை நசுக்கி அழிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். 


இந்நிலையில் வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீன மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் தங்கள் பதிகுதியை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு  காசாவில் இருக்கும் மக்கள் அனைவரும் தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை வான்வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல், இதன் மூலம் தரை தாக்குதலுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மக்கள் அங்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் சிக்கித் தவிக்கும் நிலையில் மக்களை வெளியேறச் சொல்வது எப்படி ஏற்றுக்கொல்ள முடியும் என்றும் 11 லட்சம் மக்கள் வெளியேற்றுவது சாதாரண விஷயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  


இஸ்ரேலில் 18,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இஸ்ரேலில் சுமார் 85,000 இந்திய வம்சாவளி யூதர்கள் உள்ளனர். இஸ்ரேலில் சிக்கித்தவித்து வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இதற்காக ஆப்ரேஷன் அஜய் என்ற திட்டத்தை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார். சிறப்பு தனி விமானம் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மூலம் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தின் கீழ், இஸ்ரேலில் சிக்கி உள்ள இந்தியர்கள் முதல் கட்டமாக மீட்கப்பட்டு உள்ளனர். அங்கு நடந்து வரும் போரினால் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் 212 பேர் முதல் கட்டமாக மீட்கப்பட்டு உள்ளனர். 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் கீழ் முதல் விமானம் அதிகாலை டெல்லியில் தரையிறங்கியது. அதில் 21 தமிழர்களில் 10:10க்கு  டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ  விமானத்தில் கிளம்பி 12:40 க்கு சென்னை வந்தடைந்தனர். அதில் 14 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். 7 பேர் கோவைக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.


P20 Summit: ”சேர்ந்து முன்னேற வேண்டிய நேரம்”: சபாநாயகர்கள் உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர்; பங்கேற்ற அப்பாவு!