2023 -ஆம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நினைவுகளின் காணொளியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “இந்த 2023-ஆம் ஆண்டு நினைவலைகளின் காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் 2024-ஐ வரவேற்கிறேன்!” இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு, வெள்ள பாதிப்பு, அவற்றிற்கு நிவாரணம் வழங்கியது, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடனான சந்திப்பு, ஆட்சியர்களுடனான ஆய்வுக் கூட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய காணொளியை முதலமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு


கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஓர் ஆண்டு காலம் வரை கொண்டாடப்படும் என தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் ஜூன் 3 ஆம் தேதி சென்னையில் கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறக்கப்பட்டது. மேலும், கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. அதேபோல், மதுரையில் ரூ.215 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் மக்களுக்காக திறக்கப்பட்டது.


மிக்ஜாம் புயல்


இம்மாதம் சென்னையில் மிக்ஜாம் புயலின் காரணமாக சுமார் 40 செ.மீ அளவு மழை பதிவானது. இதனால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போனது, ஏராளமான மக்கள் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். தற்போது மெல்ல மெல்ல மக்கள் அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.


தென்மாவட்டங்களில் மழை


சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்கு முன் தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 4 தென் மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக வரலாறு காணாத மழை பதிவானது. இதன்  காரணமாக 4 மாவட்டங்கள் வெள்ளக்காடாய் மறியது. மழைநீர் அகற்றப்பட்டு, அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. 






மேலும் படிக்க 


Covid Cases : 7 மாதங்களுக்கு பின் கிடுகிடு உயர்வு.. அச்சுறுத்தும் கொரோனா பரவல்.. ஒரே நாளில் 841 புதிய தொற்றுகள்..


New Year 2024: புதிய சாதனைகளுக்கும், அனுபவங்களுக்கும்.. முதல்வர் உட்பட அரசியல் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து