இந்தியாவில் மொத்தம் கடந்த 24 மணி நேரத்தில் 841 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் 4,309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில், நாடு முழுவதும், கேரளா, கர்நாடகா மற்றும் பீகாரை சேர்ந்த மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு பிறகு இன்று கொரோனா தொற்று அதிகமாக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 5- ஆம் தேதி வரை நாட்டில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் பதிவாகியது. ஆனால் குளிர்காலம் வந்த பின்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அமைச்சகத்தின் வெப்சைட் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் படி, தேசிய அளவில் நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.4 கோடிக்கு மேல் உள்ளது. மீட்பு விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமையன்று (நேற்று), நாட்டில் 743 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 3,997 ஆக இருந்தது. ஒரே நாளில் கொரோனாவால் 7 பேர் உயிரிழந்தனர். கேரளாவை சேர்ந்த 3 பேரும், கர்நாடகாவை சேர்ந்த இரண்டு பேர் மற்றும் சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை, INSACOG இன் தரவுகளின்படி, கோவிட்-19 துணை மாறுபாட்டின் JN.1 தொற்றால் 162 பேர் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டன. கேரளாவில் இருந்து அதிகபட்சமாக 83 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து குஜராத்தில் 34 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) அறிக்கையின் படி, கேரளா (83), குஜராத் (34), கோவா (18), கர்நாடகா (எட்டு), மகாராஷ்டிரா (ஏழு), ராஜஸ்தான் (ஐந்து), தமிழ்நாடு (நான்கு), தெலுங்கானா (இரண்டு) மற்றும் டெல்லி (ஒன்று) கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிசம்பரில் கோவிட்-19 இன் JN.1 variant 145 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் நவம்பரில் 17 வழக்குகள் பதிவாகியுள்ளன.
உலக சுகாதார அமைப்பு (WHO) JN.1 ஐ ஒரு தனி "variant of interest" என வகைப்படுத்தியுள்ளது. ஆனால் அதன் பரவும் வேகத்தை கருத்தில் கொண்டு இது மிதமான முறையில் உலகளாவிய பொது சுகாதார அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளது.
மேலும் படிக்க