தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. சென்னையிலும் காய்ச்சல் முகாம் உட்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சியினரும், சுகாதாரத்துறையினரும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சவுகார்பேட்டையில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் வடமாநிலத்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அங்கு நகைசெய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.