தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நீர்நிலைகள் நல்ல மழை காரணமாக நிரம்பி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயிலும், மழையும் வானிலை நிலவரமாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,


“ குமரிக்கடல் பகுதியை ஒட்டி (1.5 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மதுரை, விருதுநகர், சிவகங்கை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்ளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.




சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும்.


கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் 10 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக நாமக்கல் திருச்செங்கோடு, கன்னியாகுமரி பூதப்பாண்டி, நாமக்கல் ராசிபுரம், சேலம் எடப்பாடி, விருதுநகர் வெம்பக்கோட்டை, தேனி பெரியார், ஈரோடு பவானி, கன்னியாகுமரி கொடவாசல், தூத்துக்குடி கோவில்பட்டி, ஈரோடு ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.




வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26 அக்டோபர் முதல் வடகிழக்குப் பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் எதிர்வரும் 26 அக்டோபர் ஒட்டி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை“


மேலும் படிக்க : Deepika Padukone IPL Bid: ஷாரூக்கான், ப்ரீத்தி ஜிந்தா வரிசையில் தீபிகா படுகோனே... புதிய ஐபிஎல் அணி ரெடி?


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண