வீட்டு சமையலுக்கு  துறை விடுதியின் சமையலற்களை பயன்படுத்தி வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று திமுக கட்சியின் (போலி) சமூக நீதியைப் பார்ப்போம்!. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஒரு விளக்கப்படத்தை தயாரித்துள்ளார். அதில், ஆதி திராவிடர் நல விடுதிகளில் இருந்து சமையல்காரர்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அமைச்சர் வீட்டில் வேலை செய்ய வேண்டும் மற்றும் அங்கே ஒரு சமையல்காரராக இருக்க வேண்டும். அவமானம்’ எனப் பதிவிட்டுள்ளார்.


இதுதொடர்பாக அண்ணாமலையின் தமிழ் பதிவு:


காற்றில் பறந்தது சமூகநீதி !
மக்கள் வரிப்பணத்தில் அநீதி !


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்களை, தன் வீட்டு வேலைக்காரர்களாக ஏன் பணியமர்த்த வேண்டும் ?


ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களே


 






இவரின், இந்தப் பதிவை வெளியான பலரும் அமைச்சரின் இந்த செயலை கண்டித்து விமர்சனம் செய்தனர்.


இந்த நிலையில், அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.


 






இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அண்ணாமலை அவர்கள், எங்கள் வீட்டு சமையலுக்கு நான் எங்கள் துறை விடுதியின் சமையலற்களை பயன்படுத்தி வருவதாக அபாண்டமாக பொய் சொல்லியுள்ளார். எங்கள் வீட்டு சமையலுக்கு இரு சமையலற்களை சம்பளத்திற்கு பணியில் அமர்த்தியுள்ளேன். அவர் வெளியிட்டிருக்கும் பட்டியலுக்கும் எனக்கும்  சம்பந்தம் இல்லை” எனப் பதிவிட்டுள்ளார்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண