சென்னையில் 4-வது நாளாக சதமடித்த வெயில். மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தொடர்ந்து சதமடிக்கும் வெயில்:


சென்னை மீனம்பாக்கத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், நுங்கம்பாக்கத்தில் 99 பாரன்ஹீட் வெப்பமும்  பதிவானதாக வானிலை மையம் தெரிவித்தது.  திருத்தணியில் 100.8, மதுரையில் 105, திருச்சியில் 103, சேலம் மற்றும் தருமபுரியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சமீபத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் மோக்கா புயல் உருவானது. இந்த புயல் வங்க தேசம் மற்றும் மியான்மர் இடையே அதி தீவிர சூறாவளி புயலாக கரையை கடந்தது. இந்த புயலானது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை இழுத்து சென்றதால் வறண்ட காற்று நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்த காரணத்தினால் வெப்பத்தின் தாக்கம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக உணரப்பட்டு இருக்கிறது. 


இன்று மதியம் வெளியான வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:


15.05.2023 மற்றும் 16.05.2023 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3  டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.


குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.


வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள டிப்ஸ்:


அதிக அளவில் இளநீர்,  நீர்ச்சத்து மிகுந்த பழங்களை உட்கொள்ள வேண்டும்.


கர்ப்பிணிகளும், வயதானவர்களும் வெயிலால் அதிக பாதிப்பிற்குள்ளாவார்கள் என்பதால், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.


குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் நேரடியாக திடீரென அதீத வெயிலில் செல்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.


குறைந்தது 3 லிட்டர் தண்ணீருக்கும் மேல் அருந்த வேண்டும்.


மோர், வெள்ளரிக்காய் ஆகிவற்றை உண்பது நல்லது.


மேலும் படிக்க


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு...! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு


IPL 2023: சேப்பாக்கத்தில் பிளே ஆஃப் போட்டிகள்.. ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்.. சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி