திமுக அரசின் 100 நாள் ஆட்சி எப்படி? ABP நாடு மற்றும் சி-வோட்டர் நடத்திய பிரம்மாண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் நேரலை இன்று மாலை 6 மணி முதல் உங்கள் ABP நாடு யூட்யூப் சேனலில்....



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவை 100 நாட்கள் ஆட்சியைக் கடந்துள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி இந்த 100 நாட்களில் எப்படி இருந்தது? ABP நாடு சி-வோட்டர் நிறுவனத்துடன் இணைந்து இது தொடர்பாக பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்றுமாலை 6 மணி முதல்  https://bit.ly/3hvkXka இந்த இணைப்பில் காணலாம். 






நூறு நாட்களை கடந்து ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுக அரசு’ மக்கள் கொடுக்கும் மதிப்பெண் என்ன ? சாமானியனின் மனதில் இருப்பது என்ன ? ABP நாடு – C வோட்டர் நிறுவனம் இணைந்து நடத்திய பிரம்மாண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள்..! இன்று மாலை 6 மணிக்கு | இணைந்திருங்கள்


100 நாள் திமுக ஆட்சி எப்படி இருந்தது என அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், திமுக கூட்டணிக் கட்சிகள், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு வாக்களித்த மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், முதலமைச்சர் இந்த 100 நாட்களில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கையாண்ட விதம். 100 நாட்களில் ஸ்டாலின் அரசின் செயல்பாடுகள் குறித்த அவர்களின் மதிப்பீடு, ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீடு, மகளிர்க்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் அவர்களை மேம்படுத்த உதவுமா?, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான உறவுநிலை எப்படி உள்ளது?, ஒன்றிய அரசு என்னும் சொல் உபயோகம் தேவையா?, முதலமைச்சர் முக ஸ்டாலின் எதிர்கட்சிகளைக் கையாளும் விதம் குறித்த பிறகட்சிகளின் பார்வை?, அதிமுக ஆட்சிகாலத்தில் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த திமுக அரசின் வெள்ளை அறிக்கை தேவையானதா?, முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிமுகப்படுத்திய ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தை அவர் எந்த அளவுக்கு வெள்ளிகரமாகச் செயல்படுத்தியுள்ளார்? அதுபற்றிய உங்கள் மதிப்பீடு என பல கேள்விகளின் அடிப்படையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 




இந்த கேள்விகள் குறித்த அரசியல் கட்சி அளித்த மதிப்பீடுகள் என்ன? எந்தெந்த கட்சிகள் அதிகமாக மதிப்பீடு அளித்துள்ளன? எந்தெந்த கட்சிகள் குறைவான மதிப்பீடு அளித்துள்ளன உள்ளிட்ட விரிவான புள்ளிவிவரங்கள் இன்று மாலை 6 மணிக்கு ஏ.பி.பி நாடு யூட்யூப் சேனலில் ( https://bit.ly/3hvkXka  )நேரலையில் ஒளிபரப்பாகிறது.