'கொரோனா' என்ற கொடிய தொற்று காரணமாக பலரும் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கு காரணமாக வெளியில் செல்லமுடியாத பலரும் மன அழுத்தம் உள்ளிட்ட வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்கொலை சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மதுரை மாநகரில் மட்டும்  24மணி நேரத்தில் மூன்று இளம் பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக அடுத்தடுத்த தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.



மதுரை கரிமேடு பகுதியில் 17வயது இளம்பெண் காவியா  என்பவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்திவந்த காரணத்தால் பெற்றோர் கண்டித்ததன் விளைவாக வீட்டிலயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதேபோன்று மதுரை வசந்தநகர் பகுதியை சேர்ந்த 15 வயது இளம்பெண் பிரியங்கா என்பவர் வீட்டிலிருந்து அடிக்கடி வெளியில் செல்லக்கூடாது என கண்டித்ததால் வீட்டிலயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மதுரை சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளம்பெண் பவித்ரா என்பவர் திடிரென வீட்டிலயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மதுரை மாநகர பகுதிக்குள்  24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து  3 இளம்பெண்கள் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளிலயே முடங்கியுள்ள இளம்பெண்கள் , சிறுமிகளுக்கு மன நல ஆலோசனை வழங்கி  போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.




இது குறித்து நம்மிடம் மனநல ஆலோசகர் மற்றும் உளவியல் சிகிச்சையாளர் ப.ராஜ செளந்திரபாண்டியன்...," முன்பெல்லாம் வாழ்க்கையில் ஒரு பெரும் தோல்வியை  சந்தித்தவர்கள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டார்கள். அதேபோல் சிறு வயதினர் தற்கொலை செய்வது மிகவும் அரிதாகவே இருந்தது. இன்று சிறு சிறு விஷயங்களுக்கு கூட இளம் வயதினர் தற்கொலை செய்து  கொள்கின்றனர். வாழ்க்கையில் பிரச்னைகளை எதிர்த்து போராடக்கூடிய குணம் சற்று குறைந்தே காணப்படுகிறது.வீடுகளிலயே முடங்கியுள்ள இளம்பெண்கள் , சிறுமிகளுக்கு மன நல ஆலோசனை வழங்கி  போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.




வீடுகளிலயே முடங்கியுள்ள இளம்பெண்கள் , சிறுமிகளுக்கு மன நல ஆலோசனை வழங்கி  போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

 



 


இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறை என்றே கூறலாம். பொதுவாக சொல்லப்போனால் 2k கிட்ஸ் சந்திக்க கூடிய பிரச்னைகளை சமாளிக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் குழந்தைகளுக்கு நாம் சொல்லி தரவேண்டிய பல விஷயங்களை  சொல்லித் தராததே காரணமாகும். அது என்னவென்றால் தோல்வி, அவமானம் நிராகரிப்பு மற்றும் ஏமாற்றம். இவற்றை குழந்தைகளுக்கு கற்றுத்தர பெற்றோர்கள் மிகவும் தயங்குகிறார்கள். இதை தெரியாத ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது சாத்தியமற்ற ஒரு விஷயமாகும். அதேபோல் ஒரு காலகட்டம் வரை அவர்களுக்கு அளவு கடந்த சுதந்திரம் கொடுத்துவிட்டு, திடீரென அவர்களிடம் அதை பறிக்கும் போது அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவே அவர்களுக்கு தற்கொலை எண்ணத்தை தூண்டுகிறது. குழந்தைகளுக்கு தேவையான விஷயத்தை கற்றுத் தாருங்கள் அது அவர்களின் வாழ்வில் நல்ல ஒரு மாற்றத்தை உருவாக்கும்" என்றார்.

 


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.