'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன் என்ற தகவலை பதிவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்






ஸ்டாலின் மே 7 ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்றவுடன் அவர் கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் திருவுருவப்படத்திற்கும், தொடர்ந்து அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களிலும் மரியாதை செலுத்தினார். அது தொடர்பான ட்வீட்டை பதிவிட்டிருந்தார்.






தன்னுடைய முதல் கையெழுத்து தொடர்பான ட்வீட்டை மே 7 அன்றே பதிவிட்டார் ஸ்டாலின். மகளிருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை, பால் விலை குறைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு புதிய துறை உள்ளிட்ட அடங்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்






ஸ்டாலின் பதவியேற்ற சமயம் கொரோனா உச்சத்தில் இருந்த நேரம். அதனால் கொரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை உடனுக்குடன் ட்விட்டரில் பதிவிட்டு வந்தார் ஸ்டாலின்.






பேருந்துகளில் பெண்கள் இலவசம் என்ற அறிவிப்பில் திருநங்கைகளையும் சேர்க்க வேண்டுமென ஒருவர் வேண்டுகோள் விடுக்க, பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும் என பதிவிட்டு ட்வீட் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்






100 நாட்களில் தீர்வு என்பதன் அடிப்பையில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ' நிகழ்வில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் தகுந்த துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.






கொரோனா தொற்று நடவடிக்கைகள், ரெம்டெசிவர் இருப்பு, அதற்கான கோரிக்கை குறித்து தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். குறிப்பாக கொரோனா போருக்கு எதிராக நிதி தேவை எனவும், நிதி வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விட்டிருந்தார்






கொரோனாவை தடுக்க அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அது தொடர்பான ட்வீட்


சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து கொடுக்க வேண்டாம். புத்தகங்கள் கொடுத்தால் போதும் என்ற அன்பு கோரிக்கையை விடுத்தார்






கொரோனாவின் தீவிரத்தால் பல முன்னெடுப்புகளை கையிலெடுத்தார் ஸ்டாலின். 






எழுத்தாளர் கிராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவித்தார். கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்






பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண சிறை விடுப்பு வழங்கப்படும் என  அறிவிப்பு வெளியிட்டு ட்வீட் செய்தார்


தொடர்ந்து கொரோனா நடவடிக்கைகள் குறித்தும், மருத்துவமனை ஆய்வுகள் குறித்தும் தொடர் பதிவுகளை பதிவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்


தூத்துகுடி போராட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என மே 21ம் தேதி பதிவிட்டிருந்தார் முக ஸ்டாலின்


கொரோனா நிதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். 


கொரோனா உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு தேவை


தமிழ்நாட்டில் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு #COVID19 நிவாரணத்தொகையின் இரண்டாம் தவணையாக தலா ரூ.2000 மற்றும் 14 அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை 
தொடங்கி வைத்தார்.


மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் பல அறிவிப்புகளை வெளியிட்டார்


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க பிரதமர் மோடிக்குகடிதம்


தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த - மேலும் 1000 கலைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி  வைத்த அறிவிப்பு


திமுகவின் மறைந்த ஜெ. அன்பழகனை நினைவு கூர்ந்து இரங்கல் தெரிவித்தார்


இளம்பெண் செளமிதா தன்னுடைய தங்க செயினை கொரோனா நிதிக்கு கொடுத்த தகவலை பகிர்ந்து பாராட்டினார் ஸ்டாலின்






பிரதமர் மோடியை நேரில் சந்தித்தது குறித்த ட்வீட்டை ஜூன் 17ல் பதிவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்






டெல்லியில் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை மனைவி துர்க்கா ஸ்டாலினுடன் சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்






மேகதாது அணை குறித்த கண்டனத்தையும், தமிழக அரசின் நியாயத்தையும் குறிப்பிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்,


மத்திய அரசை ஒன்றிய அரசு எனக்குறிப்பிட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட விளக்கத்தை குறிப்பிட்டார் ஸ்டாலின், 






திமுக ஆட்சிக்கு வந்து 50 நாட்கள் ஆனதை குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார் முக ஸ்டாலின்,  


10, 11, 12 வகுப்புகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை குறித்த அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்,


பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தை பார்வையிட்டார். அது தொடர்பான ட்வீட்,


மருத்துவர்கள் தினத்துக்கு தன்னுடைய வாழ்த்துகளை பதிவிட்டார் முதலமைச்சர்,






அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை மித்ராவுக்கான மருந்து வரியை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி, அந்த தகவலை பதிவிட்டார் முதலமைச்சர்


தியாகவாழ்வுக்குச் சொந்தக்காரரான சங்கரய்யா அவர்களின் நூறாவது பிறந்தநாளில் அவரை வாழ்த்தி அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்


பத்திரிகையாளர் சித்திக் உயிரிழப்புக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்,


ஒலிம்பிக் செல்லும் தமிழக வீரர்களிடம் உரையாற்றி அது தொடர்பான தகவலை ட்விட்டரில் பகிர்ந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்






மனிதசமூகத்துக்கும் அரும்பணியாற்றி அகவை நூறு எட்டியிருக்கும் முதுபெரும் தலைவர் என். சங்கரய்யாவுக்கு  'தகைசால் தமிழர்' விருதை வழங்கி அந்த அறிவிப்பை வெளியிட்டார் ஸ்டாலின்.


மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் OBC மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு உறுதி செய்யப்ப்பட்டது. அந்த தகவலை குறிப்பிட்டிருந்தார் ஸ்டாலின்,


ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிபெற்ற இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் முக ஸ்டாலின்


ஆகஸ்ட் 2ம் தேதி தமிழகம் வந்த குடியரசுத் தலைவரை வரவேற்று புத்தகங்களை பரிசாக வழங்கினார் முக ஸ்டாலின். 


தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி திருவுருவப் படத் திறப்பு நிகழ்ச்சி குறித்தும் பதிவிட்டார் முதலமைச்சர் முக ஸ்டாலின்






மறைந்த அ.தி.மு.க. அவைத் தலைவர்  மதுசூதனன் உடலுக்கு மரியாதை செலுத்தி புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்






கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை அடுத்து மரியாதை செலுத்திய வீடியோவை வெளியிட்டார் ஸ்டாலின்


மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரை விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர்






ஆகஸ்ட் 12ம் தேதி தேசிய நூலக நாள் கொண்டாடப்படுவதை குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், நூலகம் அமைத்த கருணாநிதியை நினைவு கூர்ந்தார்