சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். இதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, திருவள்ளூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக திருவள்ளூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய இடங்களில் கனமழை பெய்யும். காரைக்கால், புதுச்சேரியிலும் கனமழை பெய்யும்.
வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழைபெய்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களாகவும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்தது.
இந்த நிலையி்ல், இன்று காலை சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால், காலையில் பணிக்கு செல்வோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் காலையில் நுங்கம்பாக்கம், கிண்டி, கோயம்பேடு, கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் வானம் நல்ல மழை பெய்தது. இன்று காலை முதலே சென்னையில் வானம் மேகமூட்டத்துடனே காணப்படுகிறது.
மேலும் படிக்க : ABP Nadu Exclusive: ‛11 ஆண்டுகள் டிடிவி உடன் இருந்தவன்... வாட்ஸ்ஆப்-ல் அழைத்தார் சென்றேன்’ -ஓபிஎஸ் தம்பி ராஜா பரபரப்பு பேட்டி!
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பெய்து வரும் கனமழையால் மாநிலத்திற்கான நீர் ஆதாரங்கள் தொடர்ந்து நிரம்பிவருகிறது. டெல்டா மாவட்டங்களில் பிரதான நீர் ஆதாரமான மேட்டூர் அணை மூன்று மாதங்களுக்கு பிறகு கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு நிரம்பியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்