ஓபிஎஸ்-யின் மதுரை பேட்டி, டிடிவி மகள் திருமண வரவேற்பில் ஓபிஎஸ் தம்பி பங்கேற்றது என அதிமுகவில் தொடர் சர்ச்சைகள் போய் கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் கருத்துக்கு வெளிப்படையாகவே நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், பதிலுக்கு ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்ததும் அதிமுகவில் எதோ நடக்கிறது என்பதை உறுதிபடுத்தியுள்ளது. சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுக்கிறார் என்பது தான் பிரதான குற்றச்சாட்டு. இன்று வரை அதை ஓபிஎஸ் மறுக்கவில்லை. மாறாக மவுனம் காக்கிறார். இந்நிலையில் தான் டிடிவி தினகரன் இல்ல வரவேற்பு நிகழ்ச்சியில் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏன் அவர் சென்றார்? அவர் பங்கேற்க அழைத்தது யார்? என்பது தொடர்பான பல்வேறு கேள்விகளுடன் ஓ.ராஜாவை ஏபிபி நாடு சார்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்... உண்மையில் அவர் அளித்த பதில்கள் கொஞ்சம் அதிர்ச்சியானதாகவும்... புதிதாகவும் இருந்தது. இதோ அவரது பேட்டி...!






 


கேள்வி: டிடிவி இல்ல வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தீர்களே...?


ஓ.ராஜா: அது... பத்திரிக்கை வந்தது. அதனால் சும்மா சென்றேன். அந்த கூட்டத்தில் சென்று வந்ததே பெரும்பாடு. அப்படி தான் நான் சென்றேன். அரசியல் எதுவும் இல்லை.


கேள்வி: உங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டதா?


ஓ.ராஜா: ஆமாம் கொடுத்திருந்தார்கள். எனக்கு அழைப்பிதழ் வந்தது.


கேள்வி: யார் அழைப்பின் பேரில் அங்கு சென்றீர்கள்?


ஓ.ராஜா: டிடிவி மட்டுமல்ல, அவரது சம்மந்தி வாண்டையாரும் அழைப்பிதழ் கொடுத்திருந்தார். இருவரும் சேர்ந்து அழைத்திருந்தனர். அதனால் தான் அங்கு சென்றேன். 


கேள்வி: : டிடிவி நேரடியாக அழைப்பிதழ் வழங்கினாரா?


அவர்கள் சார்பாக அழைப்பிதழ் வந்தது. பின்னர் வாட்ஸ்ஆப்பில் அழைப்பிதழ் அனுப்பியதை கூறி பங்கேற்ற அழைப்பு விடுத்தனர். அதன் பேரில் நேரில் சென்றேன். 


கேள்வி: ஓபிஎஸ்-க்கு அழைப்பிதழ் வழங்கவில்லையா...?


ஓ.ராஜா: அதைப்பற்றி எனக்கு தெரியாது... எனக்கு வழங்கப்பட்டது. அதனால் நான் சென்றேன். 11 வருடம் அவருடன் தான் இருந்தேன். எங்க வீட்டில் தானே அவர் தங்கி இருந்தார். திருமணத்திற்கே எனக்கு பத்திரிக்கை வந்தது. எங்கள் மதினி (ஓபிஎஸ் மனைவி) இறந்ததால் அதில் பங்கேற்க முடியவில்லை. அதனால் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றேன். 


கேள்வி: அதை கடந்து இதில் அரசியல் இல்லையா?


ஓ.ராஜா: அரசியல் எதுவும் இல்லை...!


இவ்வாறு ஓ.ராஜா பதில் அளித்திருந்தார்.


அவரது பேட்டியில் முக்கியமான ஒன்று... ‛11 வருடம் அவருடன் இருந்தவன் நான்...’ என்கிறார். இதற்கு முன் எந்த நிலையிலும் இந்த கருத்தை அவர் தெரிவித்தது இல்லை. நன்றிக்குறியவன் என்கிற ரீதியில் தான் அந்த பேச்சு இருந்தது. எங்கள் வீட்டில் தங்கிவர் அவர் என்கிறார். அந்த பாசம் எங்களுக்கு இருக்கிறது என்பதே அதன் பொருள். உரிமையில் நான் சென்றேன் என்கிற தொனியில் தான் அந்த பேச்சு இருந்தது. அரசியல் இல்லை என்பதை அமைதியாக கூறுகிறாரே தவிர அதெல்லாம் எதுவும் கிடையாது என போல்டாக ஒரு இடத்திலும் அவர் பதிவு செய்யவில்லை. இதெல்லாம் நாம் நினைப்பது போல தவறாக கூட இருக்கலாம். ஆனால் எதுவாயினும் ஏதோ ஒரு அரசியல் இழையோடுவதை புரிந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.


 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள் சில...


 










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண