தமிழ்நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேர்தலை சந்தித்த தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று அசத்தியது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ள நிலையில், கடந்த ஓராண்டில் தி.மு.க. அரசின் செயல்பாடுகள் பற்றி ஏபிபி – சி வோட்டர் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர்.


ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலின் முதல்வராக செயல்பட்ட விதம் எவ்வாறு உள்ளது என்று அரசியல்கட்சியைச் சார்ந்தவர்களிடம் கேட்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி. ஜெயலலிதா உள்பட முந்தைய முதல்வர்களை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டாரா? இல்லையா? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறிய பதில்கள் கீழே வருமாறு:


முந்தைய முதல்வர்களை காட்டிலும் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறாரா ?



முந்தைய முதல்வர்களை காட்டிலும் சிறப்பான செயல்பாடு :


தமிழ்நாட்டின் முந்தைய முதல்வர்களை காட்டிலும் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டுகிறார் என்று தி.மு.க. கூட்டணியினர் 56.8 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 24.3 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 25 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 50 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியினர் 25 சதவீதம் பேரும், மற்றவர்கள் 36.4 சதவீதம் பேரும் இந்த கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 43.2 சதவீதம் பேர் இந்த கருத்தை கூறியுள்ளனர்.


கருணாநிதி, ஜெயலலிதாவை காட்டிலும் சிறப்பான செயல்பாடு :




தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களாக பொறுப்பு வகித்து மறைந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை காட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என்று தி.மு.க. கூட்டணியினர் 13.7 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 17.8 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 18.8 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 8.3 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியினர் 12.5 சதவீதம் பேரும், மற்றவர்கள் 9.1 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தம் 14.8 சதவீதம் பேர் இந்த கருத்தை கூறியுள்ளனர்.


முழு கருத்துக் கணிப்பு விவரம் :



கருணாநிதியை விட சிறப்பான செயல்பாடு : ஆனால், ஜெயலலிதா அளவிற்கு செயல்பாடு இல்லை :


முதல்வர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியை விட சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்றும், ஜெயலலிதா அளவிற்கு செயல்படவில்லை என்று தி.மு.க. கூட்டணியினர் 7.9 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 17.8 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 12.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 8.3 சதவீதம் பேரும், நாம் தமிழர் 25 சதவீதம் பேரும், மற்றவர்கள் 9.1 சதவீதமும் இந்த கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 13 சதவீதம் பேர் இதே கருத்தை கூறியுள்ளனர். 




ஜெயலலிதாவை விட சிறப்பான செயல்பாடு ; ஆனால், கருணாநிதி அளவிற்கு இல்லை


முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்றும், கருணாநிதி அளவிற்கு செயல்படவில்லை என்றும் தி.மு.க. கூட்டணியினர் 13.2 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 8.4 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 12.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் 18.8 சதவீதம் பேரும், மற்றவர்கள் 9.1 சதவீதம் பேரும் என மொத்தம் 11.4 சதவீதம் பேரும் இதே கருத்து தெரிவித்துள்ளனர்.


கருணாநிதி, ஜெயலலிதாவை காட்டிலும் சிறப்பான செயல்பாடு கிடையாது :


கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை காட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை என்று தி.மு.க. கூட்டணியினர் 6.3 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 17.8 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 18.8 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யதத்தினர் 16.7 சதவீதம் பேரும், நாம் தமிழர் 18.8 சதவீதம் பேரும், மற்றவர்கள் 27.3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தம் 11.9 சதவீதம் பேர் இதே கருத்தை கூறியுள்ளனர்.




முன்பிருந்தவர்களை காட்டிலும் மோசமான செயல்பாடு :


தமிழ்நாட்டில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த முதல்வர்களை காட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு மிகவும் மோசமான செயல்பாடு என தி.மு.க. கூட்டணியினர் 2.1 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 10.3 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 12.5 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 16.7 சதவீதம் பேரும் மற்றவர்கள் 9.1 சதவீதம் பேரும் இந்த கருத்தை கூறியுள்ளனர். முன்பிருந்த முதல்வர்களை காட்டிலும் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதாக மொத்தம் 5.7 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண