துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மா்ம பாா்சல்களிலிருந்து சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.36 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு இன்று அதிகாலை ஏா்இந்தியா விமானம்  வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கிச்சென்றனர். 


அதன்பின்பு அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல தயாராக இருந்தது. இதையடுத்து ஏா் இந்தியா ஊழியா்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் கழிவறை தண்ணீா் தொட்டிக்குள் 2 மா்ம பாா்சல்கள் இருந்ததை கண்டுப்பிடித்தனா். இதையடுத்து சுத்தப்படுத்தும் பணியை நிறுத்திவிட்டு, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா்.


<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சென்னை விமான நிலைய சுங்கத்துறை: துபாயிலிருந்து வந்த AI 906 விமான சோதனையில் பின்புறம் உள்ள இரு கழிவறைகளிலிருந்து ரூ. 65.38 லட்சம் மதிப்புள்ள 1.36 kg தங்கம் உரிமை கோரப்படாததாக கைப்பற்றப்பட்டது. <a >pic.twitter.com/yY9oRg4hsJ</a></p>&mdash; Chennai Customs (@ChennaiCustoms) <a >April 10, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடக்டா்களுடன் விரைந்து வந்து தண்ணீா் தொட்டிக்குள் இருந்த பாா்சலில் வெடிகுண்டுகள் ஏதாவது இருக்கிறதா? என்று சோதனையிட்டனா். அதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த பாா்சல்களை பிரித்துப்பார்த்தபோது அதில் தங்கக்கட்டிகள் இருந்தன.


இதையடுத்து சுங்கத்துறைக்கு தகவல் கொடுத்தனா். அவா்கள் வந்து பாா்சல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். அந்த 2 பாா்சல்களிலும் 1.36 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. அதன் சா்வதேச மதிப்பு ரூ.65.38 லட்சம், இதையடுத்து தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.