கொரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்கு இடையே சற்று ஆறுதல் தரும் விதமாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி தற்போது இந்தியா வந்து சேர்ந்துள்ளது. இதனை நிதி ஆயோக் உறுப்பினரும் கொரோனா கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்குழுத் தலைவருமான டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.





இதுகுறித்து இன்றைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ‘ஸ்புட்னிக் தடுப்பூசி வரும் வாரங்களில் சந்தையில் கிடைக்கப்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ரஷ்யாவிலிருந்து வந்திருக்கும் இந்தத் தடுப்பூசியின் விற்பனை அடுத்தவாரம் தொடங்கும்.தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே நமக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அடுத்தக்கட்டமாகவும் நமக்குத் தடுப்பூசி வந்துசேரும்.வரும் ஜூலை மாதத்தில் அடுத்தக்கட்ட தடுப்பூசிக்கான தயாரிப்புப் பணிகள் தொடங்க இருக்கின்றன. மொத்தம் 15.6 கோடி தடுப்பூசிகளைத் தயாரிப்பது திட்டமிடலில் இருக்கிறது’ என்றார்.  இந்தியா ஏற்கெனவே கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளைச் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.