நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற நோக்கத்தில் கடந்த மாதம் சென்னையில் பொதுமக்களிடையே மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அதனடிப்படையில் பொது மக்களிடையே மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டு வரும் வகையில் தருமபுரி மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி சார்பில் தருமபுரி உழவர் சந்தையில் பொதுமக்களுக்கு மஞ்சபை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்ரமணி வழங்கினார். உழவர் சந்தைக்கு வருகைபுரிந்த பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் மஞ்சபைகளை வாங்கி சென்றனர். இதனுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் வகையில் மரக்கன்றுகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செந்தில்குமார் உள்ளிட்ட திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி நகராட்சிக்குட்பட்ட சுடுகாட்டில் அடிக்கடி குப்பை கழிவுகளை கொட்டி எரிப்பதால், வெளியேறும் புகையால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்
தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகளில்,70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறப்பவர்களை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துனமனைக்கு எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான எரியூட்டுவதும், சுடுக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. சாலையோரங்களில் அடையாளம் தெரியாமல் இறப்பவர்களையும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, இறப்பவர்களின் உடல்களை உறவினர்கள் வாங்க வராமல் இருக்கும் உடல்களையும் நகராட்சி சுடுகாட்டில் அடக்கம் செய்ப்படுகிறது.
தற்போது சுடுகாட்டில் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பபைகளையும், இறைச்சி கடைகளில் பயன்படுத்தும் கழிவுகளையும் சுடுகாட்டில் கொட்டி செல்கின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளிலிருந்து இரவு நேரங்களில் வந்து குப்பை கழிவுகளை பலர் கொட்டிவிட்டு செல்கின்றனர். அதே போல் இறந்தவர்கள் பயன்படுத்திய உடைகளையும், மாலைகளையும் வீசிசெல்வதை மொத்தமாக கொட்டி எரிக்கப்படுகிறது. இந்த சுடுகாடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சேலம் பிரதான சாலையில் அமைந்துள்ளதால், போக்குவரத்து அதிகமாக உள்ளது.
இந்த சுடுகாட்டில் அடிக்கடி கனவுகள் எரிக்கப்படுவதால், அதில் இருந்து வெளியேறும் கரும்புகை பரவி ஒருவகையான நெடியுடன் வீசுவதால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி இதுப்போன்று குப்பைகளை எரிப்பதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனவே சுடுகாட்டில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து குப்பைகள் எரிப்பதை தடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.