கிருஷ்ணகிரி மாவட்டம்  ஒசூர் மாநகராட்சி பகுதியில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை சின்னார் என்னுமிடத்தில் அமைந்துள்ளது ஸ்டார் பிரியாணி ஓட்டல். இந்த பிரபலமான  ஓட்டலில் தினந்தோறும் பல்வேறு ஓசூர் பகுதி  மக்கள் , நெடுஞ்சாலையில் பயணிக்கும் மக்கள் என  800 முதல் 1000 நபர்கள் மேல்  இந்த ஸ்டார் பிரியாணி ஓட்டலில்  பிரியாணி சாப்பிட்டு செல்கின்றனர். மேலும் இந்த ஓட்டல் எப்பொழுதுமே  கூட்டமாகவே தான் இருக்கும். அதனை தொடர்ந்து இந்த ஸ்டார் பிரியாணி ஓட்டலுக்கு காவேரிப்பட்டிணம் அடுத்த சப்பாணிபட்டி கிராம பகுதியை சேர்ந்த நண்பர்களான மூர்த்தி, அருண், இராமச்சந்திரன், அருள் ஆகிய 5 நபர்கள் வந்தனர். இவர்கள் ஓட்டலில் சாப்பிடுவதற்கு  4 சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர்.




அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரியாணியில் பெரிய அளவிலான புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ஓட்டல்  நிர்வாகத்திடம் பிரியாணியில் புழு உள்ளதாக முறையிட்டுள்ளனர். இதற்கு ஓட்டல் நிர்வாகத்தினர் கத்திரிக்காயிலிருந்து புழு வந்திருக்கலாம் என அலட்சியமாக கூறி உள்ளனர். உடனடியாக கோபமடைந்த ஐந்து நபர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்னர் ஹோட்டல் நிர்வாகத்தினர் எங்களின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் உள்ளது அவர்களிடம் நீங்கள் பேசுங்கள் என ஓட்டல் நிர்வாகத்தினர் போன் செய்து கொடுத்துள்ளனர். அப்போது பேசிய பெங்களூருவில் இருந்து எதிர்திசையில் பேசிய மேனேஜர் தற்போது உள்ள காலத்தில் பிரியாணியில் புழு இருந்ததெல்லாம் ஒரு புகார் என்று நீங்கள் கூறலாம், நீங்கள் அதையெல்லாம் விட்டு விட்டு உங்களுக்கு புதிய பிரியாணி தரகூறுகிறேன் அதை நீங்கள்  சாப்பிட்டு போகுமாறு அலட்சியமாக கூறியுள்ளார்.



என்னாது ராமநாதபுரத்துல பூங்கா இருக்கா' 'அங்க வண்டிய நிறுத்த இவ்வளவு காசா - மக்கள் வரவேற்பை பெறாத ஐந்திணை பூங்கா


இந்த சம்பவம் குறித்து ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டவர்கள் கூறுகையில், பலரும் இங்கு வந்து  நம்பி சாப்பிடக்கூடிய இந்த ஓட்டலில் இதுப்போன்ற சம்பவங்களின் போது கூட திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் அலட்சியம் காட்டும் இவர்கள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பிரியாணியில் புழு இருந்த சம்பவம் அப்பகுதியில் பிரியாணி பிரியர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தரமற்ற உணவு விற்பனை மற்றும் கலப்படம் குறித்த புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது


சுண்டி இழுக்கும் மதுரை கூரைக்கடை! Madurai !koorai kadai