நடிகர் ரஜினி நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ வேண்டி தருமபுரியில் ரஜினியின் சகோதரர் தலைமையில் 108 சங்காபிேஷகம் பூஜை செய்து வழிபாடு நடத்தினார். தருமபுரி சனத்குமார் ஆத்துமேட்டில் உள்ள பழைமை வாய்ந்த சர்வாங்கசுந்தரி சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவில், நடிகர் ரஜினியின் பிறந்தநாளையொட்டி ரஜினி நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ வேண்டி 108 சங்காபிேஷகம் நடந்தது. இந்த சிறப்பு பூஜையில் ரஜினியின், சகோதரர் சத்யநாராயணா ராவ் கெய்வாட் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தார். இந்த பூஜையில் ரஜினி மற்றும் உலக மக்கள் நன்மைக்காக, 108 சங்காபிேஷகத்தை, ரஜினி மன்ற நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்து கொண்டது, சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

 



 

ரஜினியின் விரும்பம், உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே. அவரின் விருப்பத்தை, சுவாமியிடம் பிராத்தனையாக வைத்துள்ளேன். அனைவரும் குடும்ப உறவுகளோடு ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாக வாழ வேண்டும். மேலும் மற்றவர்களின் பொன் பொருளுக்கு ஆசைப்படாமல், தங்களை உழைப்பை நம்பி சந்தோசமாக மக்கள் வாழ வேண்டும் என சத்திய நாராயண ராவ் தெரிவித்தார்.


 




 

டிச.16, 17 ஆகிய தேதிகளில் அரூரில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாட்டில் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு


 

தருமபுரி செங்கொடிபுரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் செய்தியாளர்களிடம் சந்தித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு 3 ஆண்டு இடைவெளியில் நடைபெறுவது வழக்கம். கொரோனா பாதிப்பிற்கு பிறகு தற்போது மாநாடு நடைபெறவுள்ளது. இதில் தருமபுரி மாவட்டத்தின் 23-ஆவது மாவட்ட மாநாடு டிச.16, 17 ஆகிய இரண்டு நாட்கள் அரூரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாட்டில் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் இரண்டு நாட்களும் பங்கேற்கிறார். நமது விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்கள் மத்திய அரசால் திரும்பப் பெற்றுள்ளது. மேலும் விவசாயிகளின் ஏனைய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

 




 


எங்களுக்கு டீச்சர் வேணும் - காலையில் மனு அளித்த மாணவி; மாலையே பள்ளிக்கு விசிட் அடித்த திருப்பத்தூர் ஆட்சியர்


இதேபோல, தருமபுரி மாவட்டத்தில் நீர்ஆதராங்கள் குறிப்பிடும்படியாக இல்லை. இதேபோல, பொழிகின்ற மழைநீரை சேமித்து வைக்கின்றத் திட்டங்கள் ஏதும் இல்லை. தருமபுரிக்கு அறிவிக்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் இதுவரை நிறைப்படவில்லை. வேலையின்மையை தடுக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இக் கோரிக்கைகள் மற்றும் காவிரி, தென்பெண்ணை ஆற்றின் மிகை நீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் திட்டம் நிறைவேற்ற வேண்டும் ஆகியவை இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளதாக குணசேகரன் தெரிவித்தார்.