நகர் பகுதியை ஒட்டியுள்ள ஏரியில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தருமபுரி நகரை ஒட்டி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் ராஜாக்கள் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு அருகில் உள்ள சோகத்தூர், கடகத்தூர், பிடமனேரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீரின் மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் பஞ்சப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் முப்பதும் ஏற்பட்ட ஏரிகள் நிரம்பி இறுதியாக இந்த ராமாக்களில் வருகிறது.  மேலும் இதிலிருந்து வெளியேறும் உபரி நீர் சனத்குமார் நதியின் கலந்து தென்பன்னையாற்றில் கலக்கிறது.  இந்நிலையில் ராமாக்காள் ஏரியில் தண்ணீர் தேக்கி வைப்பதன் மூலம் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.  மேலும் இதன் மூலம் 5,000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதியின் பெறுகின்றன. மேலும் தர்மபுரி நகரில் ஒட்டி இருப்பதால் நகர் பகுதியில் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததாலும், ஏரிகளுக்கான நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் ராமாக்காள் ஏரிக்கு நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது.

 



 

இதனைத் தொடர்ந்து தருமபுரி நகராட்சி பகுதியில் உள்ள கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து, ஏரியில் நிரப்பும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வந்தது. இதனால் சிறிதளவு தண்ணீர் ராமாக்காள் எப்பொழுதும் இருந்து கொண்டே வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று மாத காலமாக தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையால் பஞ்சப்பள்ளி அணை நிரம்பி உபரி நீர் நான்கு மாதத்திற்கு மேலாக ஆற்றில் செல்கிறது. இதனால் இந்த உபரி நீரின் மூலம் 30க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் கடகத்தூர், சோகத்தூர் ஏரிகள் நிரம்பி, ராமாக்காள் ஏரிக்கான  நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ராமாக்காள் ஏரி தற்போது நிரம்பி உபரி நீர் கோடி வழியாக வெளியேறி வருகிறது. இந்நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி நிரம்பியதால், விவசாயிகள், பொதுமக்கள் ஏரி கொடியில் சிறப்பு பூஜை செய்து, ஆடு பலியிட்டு மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

 



 

மேலும் தண்ணீர் வெளியேறு கோடியில் அதிக அளவு மீன்கள் வெளியேறி வருவதால், பல்வேறு கிராமத்தைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்களும், சிறுவர்களும் ஏரியில் தக்காளி வைக்கும் பிளாஸ்டிக் குடைகளை வைத்து மீன்களை பிடித்து செல்கின்றனர். மேலும் 18 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வெளியேறுவதால், சுற்று வட்டார கிராமங்களில் உள்ள மக்கள் மகிழ்ச்சியோடு கண்டு ரசித்து விட்டு செல்கின்றனர். மேலும் இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடும், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு இல்லாமல் இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். மேலும் தருமபுரி நகராட்சிக்கு அருகில் இருப்பதால், இந்த ஏரிக்கான கால்வாயை தூர்வாரி, ஏரியை செம்மைப்படுத்த வேண்டும். மேலும் பொழுதுபோக்கு பூங்கா அமைத்து, படகு சவாரி அமைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.