தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, விடுதலை போரில் தமிழகம்” தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையில் வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்கு சென்று வருகிறது. இந்த ஊர்தி இன்று தருமபுரி மாவட்டத்திற்கு வந்தது. இந்த அலங்கார ஊர்தியினை தருமபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் சுங்க சாவடியில் சட்ட மன்ற உறுப்பினர்கள்,  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி வரவேற்றனர்.

 



 

அதனைத் தொடந்து தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்தியை தருமபுரி மாவட்ட  ஆட்சியர் ச.திவ்யதர்சினி, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மலர்தூவி வரவேற்றனர். இதனை ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் ஆர்வமாக கண்டு ரசித்தும், புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி இன்று (10.02.2022) மற்றும் நாளை 11.02.2022 ஆகிய 2 நாட்கள் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிபடுத்தப்படுகிறது. மேலும் சுதந்திர போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில் இருந்த, தருமபுரி அன்னசாகரம் பகுதியை சேர்ந்த சிவகாமி அம்மாள் ஊர்தியை பார்வையிட்டு மலர் தூவினார்.

 

 



 

தருமபுரியில் நகா்புற உள்ளாட்சி தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல் துறையினா் அணி வகுப்பு ஊர்வலம்

 



 

தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகா்புற உள்ளாட்சி தோ்தல் குறித்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் பல விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதேபோல் தருமபுாி மாவட்ட காவல் துறை சாா்பில் நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை விளக்கும் வகையிலும், மேலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 

 



 

இன்று தருமபுரி நகரில் காவல் துறையினரின் அணி வகுப்பு ஊர்வலம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கலைச்செல்வன் உத்தரவின்படி, துணை கண்காணிப்பாளா் வினோத் தலைமையில் நடைபெற்றது. இந்த ஊர்வலம் தருமபுாி அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனையில் தொடங்கி, காந்திசிலை, கடைவீதி, அவ்வையாா் மகளிா் பள்ளி என நகாின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நான்கு ரோடு பகுதியில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தில் 150 காவல் துறையினர் கலந்து கொண்டனர்.