கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த கைத்தறி மற்றும் நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி செய்தியாளர்களிடம் பேசும் பொழுது நீட் விவகாரத்தில் முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீட் விலக்கு பெறுவது ஒன்றே இலக்காக தமிழக முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். எனவே முயற்சி செய்தால் முடியாதது என்பது எதுவும் இல்லை. ஆகவே தமிழகத்திற்கு நிச்சயமாக நீட் தேர்வில் இருந்து திமுக அரசு விலக்கு பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என தெரிவித்துள்ளார்
அதிமுக அரசு தீட்டிய திட்டங்களையே திமுக துவக்கி வைக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர் காந்தி, 10 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதியால் தீட்டப்பட்ட திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியது. அவர்கள் அந்த திட்டங்களுக்கு பெயர்களை மட்டுமே மாற்றி வைத்து அவர்கள் செயல்படுத்துவதாக கூறிக்கொள்கின்றனர். திமுக புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என பதிலளித்தார். 505 பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது குறித்த கேள்விக்கு, அவ்வாறு எந்த பொய் வாக்குறுதி கொடுக்கவில்லை நாங்கள் சொல்வதை தான் செய்வோம் செய்வதைச் சொல்வோம் மேலும் முதலமைச்சர் பல்வேறு சொல்லாத உன்னத திட்டங்களையும் மக்களுக்காக நிறைவேற்றி வருகிறார் என பதிலளித்தார்.
நீட் தேர்வு குறித்து அதிமுக செய்துவரும் விமர்சனம் குறித்த கேள்விக்கு, காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தில் குறிப்பாக கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வு தமிழகத்தில் அனுமதிக்கப்படவில்லை. போல அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சியிலும் நீட்தேர்வு தமிழகத்துக்குள் நுழைய வில்லை ஆனால், முட்டாள்கள் ஆகிய நீங்கள், உங்கள் ஆட்சியில்தான் நீட் தேர்வை தமிழகத்திற்குள் ஏன் அனுமதித்தீர்கள் என கேள்வி எழுப்பினார். எனவே நீட் விலக்கு பெறுவது ஒன்றே இலக்காக முதலமைச்சர் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை, எனவே தொடர்ந்து முயற்சி செய்து முழுமையாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் விவகாரம் 5 மாநில தேர்தலுக்காக கையில் எடுக்கப்பட்டுள்ளது - காங். பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா