தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து நகரப் பகுதிகளுக்குள் வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் ஆகியவைகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டதையடுத்து போக்குவரத்து காவல் துறையினர், அந்த வாகனங்களின் எண்ணை அடையாளம் கண்டு ஆன்லைன் மூலம் அபராதம் விதித்தனர். ஆனால் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்கள், ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அபராதம் கட்டாதது தெரிய வந்தது. இதனையடுத்து மாவட்ட கவல கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் உத்தரவின் பேரில், தருமபுரி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சரவணன், சின்னசாமி, ரகுநாதன் ஆகியோர் இன்று தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.




அப்போது  ஆன்லைன் மூலம் அபராதம் பெற்று கட்டாத  இருசக்கர வாகனங்கள், கார்கள்,ஆட்டோ உள்ளிட்ட 88 வாகனங்களை பறிமுதல் செய்தனர். அந்த வாகன உரிமையாளர்களுக்கு, போக்குவரத்து விதிகளை மீறியதாக ஆன்லைன் மூலம்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என எடுத்து கூறி உடனடியாக  அபராத தொகையை இ சேவை மையங்களில் கட்ட வேண்டும். அவ்வாறு அபராதம் கட்ட தவறியவர்களுக்கு காவல் துறையினர் அறிவுரைகள் வழங்கினார். மேலும்  அவர்கள் அபராத தொகையை கட்டும் வரை, வாகனங்கள் போக்குவரத்து காவல் துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு, அபராதம் கட்டிய பிறகு அதற்கான ரசீதை போக்குவரத்து காவலரிடம் கொடுத்து, வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம் என போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்தனர்.


 




 



தருமபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து தொடர்ந்து சரிந்து, 825 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.4.33 இலட்சத்திற்கு ஏலம்.




 


தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு  ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர். தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பட்டுக்கூடு வரத்து சரிந்து வந்தது. 




இன்று நடைபெற்ற  ஏலத்தில் மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் கொண்டு வரவில்லை. மேலும் 12 விவசாயிகள் கொண்டு வந்த 825 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ஏலம் விடப்பட்டது. இதில் குறைந்தபட்சம்  ரூ.525-க்கும், அதிகபட்சமாக ரூ.596-க்கும், சராசரியாக 402 ரூபாய் என ஏலம் போனது. மேலும் கடந்த சில நாட்களாக விட,  பட்டுக்கூடு வரத்தும், விலையும் குறைந்தும் விற்பனையானது. இதனால் இன்றைய ஏலத்தில் 825 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.4.33 இலட்சத்திற்கு விற்பனையானது. மேலும் இனிவரும் நாட்களில் பட்டுக்கூடு வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.