சேலம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் "மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் மெய்யனூர் பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், ஒன்றிய அரசால் தமிழகம் எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறது என்பதை தினந்தோறும் பார்த்து வருகிறோம். தினம்தோறும் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை மற்றும் அளவிற்கு உயர்ந்து கொண்டு உள்ளது. இதனை கண்டு கொள்வதால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக உயர்த்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் வாழ்க்கையை வஞ்சித்து வருகிறது. தொடர்ந்து மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கிறது. மாநில உரிமைகளை காலில் போட்டு மிதித்து மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசாக ஒன்றிய அரசு இருந்து வருகிறது என கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. தெற்காசிய நாடுகளில் பணக்காரர் பட்டியலில் மிகுந்தவர்கள் இப்போது உலக அளவில் பணக்காரர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் சாதாரண மக்களின் வாழ்க்கை என்றாலும் முன்னேறவில்லை என்று குற்றம் சாட்டினார். புதிய கல்வி கொள்கை திட்டம் கொண்டு வந்து திணிக்கப்படுகிறது. ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற்று விடக்கூடாது என்பதற்காக நீட் தேர்வு, தமிழர்களுக்கு மருத்துவக் கல்வி பெற்று விடக்கூடாது என்பதற்காக அமுல்படுத்தப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் என்று உச்சநீதிமன்றத்திற்கு நிகரான ஒரு ஆணையத்தை அமைத்து காவிரி ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் மத்திய அரசு சொல்வதை செய்யும் ஆணையமாக, அதிகாரம் பெற்ற ஒரு ஆணையமாக காவிரி மேலாண்மை வாரியத்தை மாற்றி உள்ளது என்று குற்றம்சாட்டினார்.
திமுக கூட்டணியில் இருந்தபோதிலும் நம் மண்ணிற்கான உரிமைகளை கேட்க ஒருபோதும் அச்சப்படமாட்டோம். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதிக்காக மட்டும் தொடங்கிய மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை தமிழகம் முழுவதும் பரவலாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தார். பல உயிர்களை கொல்லும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்திய வேல்முருகன் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாள் கூறியது போல மதுபானக் கடைகளை படிப்படியாக மூட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக தங்களோடு திமுகவும் எதிர்த்து போராட வேண்டும் என்றும் கூறினார். எட்டுவழி சாலை விவகாரத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஏன் தடுமாற்றம் இருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பினார். கோரிக்கைகளை வலியுறுத்தினால் கூட்டணியிலிருந்து குதர்க்கமாக பேசுகிறேன் என்கிறார்கள். முதலமைச்சருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்; அவ்வப்போது மக்கள் பிரச்னைகளை நினைவுப்படுத்தும் வேலையை கூட்டணியிலிருந்து செய்வேன். ஆட்சியாளரகளிடமிருந்து என்னை பிரிக்க சங்பரிவார் சூழ்ச்சி செய்கின்றனர் என்று கூறிய வேல்முருகன் தமிழக முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்த ஆளுநரே காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.