தருமபுரி: வாணியாறு அணையின் நீர்மட்டம் 62 அடியாக உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

வாணியாறு அணையின் நீர்மட்டம் 62 அடியாக உயர்வு-ஓரிரு நாட்களில் ஆற்றில் உபரிநீர் திறக்க வாய்ப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி.

Continues below advertisement

ஏற்காடு மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வாணியாறு அணையின் நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்துள்ளது. ஓரிரு நாட்களில் ஆற்றில் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Continues below advertisement

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் தண்ணீர் தேக்கி வைத்து திறப்பதன் மூலம் இடதுபுற கால்வாய் வழியாக வெங்கடசமுதிரம், மெணசி, ஆலபுரம், ஓந்தியம்பட்டி, தென்கரைக்கோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட ஏரிகளுக்கு, வலதுபுற கால்வாய் வழியாக ஏ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, சாலூர், புதுப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏற்காடு மலை மீது தினந்தோறும் கனமழை பெய்து வருவதால், வாணியாறு அணை நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மழை தொடங்குவதற்கு முன்பு அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு குறைவாக இருந்து வந்தது. தற்போது ஏற்காடு மலையில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் மளமளவென 35 அடி வரை உயர்ந்தது.

தொடர் மழையால் கடந்த வாரத்தில் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 88 கன அடி வரை இருந்து வந்தது. ஆனால் தற்பொழுது மழை குறைந்து வருவதால் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 40 கனஅடியாக இருந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம், தற்போது 62 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அணையின் மொத்த உயரம் 64 அடி உயரத்தில், இன்னும் (62 அடி) ஒரு அடி வரை தண்ணீர் நிரம்பினால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் ஆற்றில் திறக்கப்படும். தொடர்ந்து ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 62 அடியை எட்டியதும், உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் வாணியாறு ஆற்றங்கரையோரம் உள்ள வெங்கடசமுத்திரம், மோளையானூர், ஜீவா நகர், மெனசி, பூதநத்தம் அம்மாபாளையம், பறையப்பட்டி உள்ளிட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த நேரத்திலும், அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வாணியாற்றில் இறங்குவோ,  கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவோ வேண்டாம் என பொதுப்பணி துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் எப்பொழுதும் வாணியாறு அணை நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிரம்பும் நிலையில் இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்பாகவே நிரம்பியதால், பாசன விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola